Published:Updated:

போட்டோ தாக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வைகோ, உதயநிதி ஸ்டாலின், துரை வைகோ
வைகோ, உதயநிதி ஸ்டாலின், துரை வைகோ

ம.தி.மு.க-ங்கறதை மகன் தி.மு.க ஆக்கிட்டீங்கபோல?!

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

FACEBOOK

Haja Maideen

வைகோ: இவர் என் ‘வாரிசு’ என்று நீயும் நினைக்க வேண்டாம். உன்னை ‘வாரிசு’ என்று நானும் நினைக்கவில்லை. ஓகே... டீல் ஓவர்!

Ambai Deva

வைகோ: யு நோ ஒன் திங்... வாரிசு அரசியல் எனக்கு இளமையில் பிடிக்காமத்தான் இருந்தது... இப்ப வயதான பிறகு அதுதான் ரொம்பப் பிடிக்குது. ஹி... ஹி...

Vaira Bala

வைகோ: ‘வாரிசு அரசியலை ஒழிக்க நாம் மூவரும் சேர்ந்து உழைப்போம்’ என்று இந்தத் தருணத்தில் உறுதி பூணுவோம்!

Ramachandran Packya

உதயநிதி: துரை... உங்களுக்கு அரசியலுக்கு வரவே விருப்பமில்லைனு கேள்விப்பட்டேன்...

துரை: ஆமா உதய். உங்களை மாதிரியே தந்தையின் வற்புறுத்தலால்தான் நானும் அரசியலுக்கு வந்திருக்கேன்!

Pointcalimere PSrinivasan

வைகோ: தம்பி உதய்... நம்ம கூட்டணியில் துரையையும் சேர்த்துக்கணும்...

உதயநிதி: என்னண்ணே... இது ‘மகன்நலக் கூட்டணி’யா?

Maria Pushpa Raj

வைகோ மைண்ட் வாய்ஸ்: வாரிசு அரசியலை எதிர்த்து அரசியல் நடத்தி... இன்று வாரிசின் வாரிசுக்குப் பொன்னாடை போர்த்த வைத்தது காலமா... என் வாரிசா?

துடுப்பதி வெங்கண்ணா

உதயநிதி: ம.தி.மு.க-ங்கறதை மகன் தி.மு.க ஆக்கிட்டீங்கபோல?!

வைகோ: தாத்தாவோட பேச்சு சாதுர்யம் உனக்கும் இருக்குப்பா ஹி... ஹி...

TWITTER

@LAKSHMANAN_KL

வைகோ: மூன்றாம் கலைஞரே... இந்த இரண்டாம் வைகோவுக்கு நீங்கதான் ஒரு வழி காட்டணும்..!

@balasubramni1

வைகோ: என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் உதயநிதி... அதுல நான் எப்பவும் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்!

@KrishnaratnamVC

உதயநிதி (மைண்ட் வாய்ஸ்): ‘இனி எனக்கு பதில் இவர்’னு டி.வி சீரியல்ல அறிமுகம் செய்வதுபோலச் செய்யறாரே..!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு