Published:Updated:

போட்டோ தாக்கு

“யார்யா அது... கூட்டத்துலருந்து ‘அஞ்சு கோடி அன்புமணி’னு சத்தம் போட்டது?”

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

``முன்பு தியேட்டரில் ரிலீஸாகிற படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய நாம்... இன்று ஓடிடி-யில் ரிலீஸாகிற படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறோம் என்றால்... அதுவே ‘மாற்றம்... முன்னேற்றம்!’ ‘’

@Kirachand4

``எளநியில தண்ணி நிறையா இருக்கணும்னு கேட்டு வாங்கினாலும்... உள்ள ‘உள் இட ஒதுக்கீடு’ மாதிரி ஒண்ணும் இல்லாமப் போச்சே?’’

@PG911_twitz

``இது போன்ற சுவையான இளநீர், நாடாளுமன்றத்துக்கு அருகிலும் கிடைத்தால் நான் ஏன் வீட்டில் இருக்கப்போகிறேன்!?’’

@ParveenF7

``மாம்பழம் சின்னத்தை வெச்சுக்கிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியலை... இளநீர் சின்னத்தை ஒதுக்கச் சொல்லிக் கேப்போமா..?’’

@RavindranRasu

தொண்டர்: சின்னய்யா... ஹாலிவுட் படங்களுக்கு புரொமோஷன் பண்ணிக்கொடுக்கச் சொல்லிக் கேட்டு வந்துருக்காங்க!

அன்புமணி: நிம்மதியா ஒரு இளநீர் குடிக்க விடுறாங்களா!?

@pasakkarapaiyan

“தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு” என்று முணுமுணுத்துக்கொண்டே செல்கிறார் அந்தப் பெரிய மருத்துவர்!

FACEBOOK

Kavi Chennappan

``அவங்க அவங்க எடுக்குற படம் நமக்குச் சாதகமாகத்தான்யா இருக்கு..!’’

Kavi Chennappan

``ஒன்பது கேள்வி கேட்டதுக்கு, ஒன்பது இளநீர் குடிச்சாத்தான் சரியா இருக்கும்!’’

Jiya Sen

“அடுத்து என்ன போராட்டம் தலைவரே?”

“ ‘எதற்கும் துணிந்தவன்’ என்கிற பட டைட்டிலை மாத்தச் சொல்லணும்!”

Sathia Moorthi

“யார்யா அது... கூட்டத்துலருந்து ‘அஞ்சு கோடி அன்புமணி’னு சத்தம் போட்டது?”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு