Published:Updated:

போட்டோ தாக்கு

ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ்

உடனடியாக ஒரு நர்ஸிங் காலேஜாவது கட்டி, அன்புமணியை அந்த முதல்வர் நாற்காலியில் அமரவெக்கணும்!

போட்டோ தாக்கு

உடனடியாக ஒரு நர்ஸிங் காலேஜாவது கட்டி, அன்புமணியை அந்த முதல்வர் நாற்காலியில் அமரவெக்கணும்!

Published:Updated:
ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

“இனி, முதல்வர் கனவு காணுறதை நிறுத்திட்டு, அன்புமணியை பிரதமர் கனவு காணச் சொல்லப்போறேன். அட்லீஸ்ட் கனவிலாவது அவருக்கு ஒரு புரொமோஷன் கிடைக்கட்டுமே..?!”

@vedhaalan

“ஒரு காலண்டரோட மதிப்பு 5 கோடி ரூபாய்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா... நான் அரசியலுக்கே வராம காலண்டர் வியாபாரி ஆகியிருப்பேன்!”

@Vkarthik_puthur

“மார்க்கெட்ல தக்காளிக்கு இருக்குற மதிப்புகூட அரசியல்ல மாம்பழத்துக்கு இல்லையே!”

@amuduarattai

“சீஸனுக்கு ஏற்ற மாதிரி நாம் கூட்டணி மாறுவோம்தாம். அதற்காக, `தக்காளி விலை அதிகமாகிடுச்சு. நம் கட்சியின் சின்னமாகத் தக்காளியை மாற்றுங்கள்’ என்று சொல்வது நன்றாக இல்லை!”

@sarathitup4

“அவங்களைத் திட்றோம், அவங்க கூடவே கூட்டணி வெக்கிறோம், தோத்ததும் வெளிய வர்றோம், ரிப்பீட்டு. மறுபடியும் அவங்களைத் திட்றோம்...”

@NedumaranJ

``நாளுக்கு நாள் என்னோட நம்பிக்கை தளர்ந்துகொண்டே போகுது... இனியும் பொறுக்க முடியாது. உடனடியாக ஒரு நர்ஸிங் காலேஜாவது கட்டி, அன்புமணியை அந்த முதல்வர் நாற்காலியில் அமரவெக்கணும்!’’

@RavikumarMGR

“சத்ரியன்னு சொன்னா... விஜயகாந்த் நடிச்ச படமான்னு கேக்குறியே... எங்கேருந்துய்யா வர்றீங்க நீங்கள்லாம்...!”

FACEBOOK

Hemanth K Govindh

“டேய்... மாவட்டம்... என்ன பண்ணுவியோ தெரியாது. 2024-ல அன்புமணி பிரதமர் ஆகியே தீரணும்!”

Sathia Moorthi

“அன்புமணியைத் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தைலாபுரத்தைத் தனி நாடாக்கிக் கொடுங்கள். அன்புமணியை அதற்கு முதலமைச்சராக்கிக் கொள்கிறோம்!”

Jiya Sen

``நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் அன்புமணி எங்கே போனார் என்று கேட்குறாங்க... அவர், அந்த நேரத்தில் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகள் எழுதிக்கிட்டிருந்தார்!’’

H Umar Farook

“என்ன படம் எடுத்திருக்காங்க... `மாநாடு’ படத்துல ஒரு காலண்டர் காட்சிகூட இல்லையாமே?!’’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism