Published:Updated:

போட்டோ தாக்கு

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஒத்த செருப்புகள்லாம் கரெக்ட்டா இத்தனை மணிக்குத்தாங்க என் கார் முன்னடி வந்து விழுந்தது

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

Twitter

@Kirachand4

எடப்பாடி: நம்ம கட்சியில் மட்டும்தான் தொண்டரும் தலைவனாகலாம்ணே!

பன்னீர்செல்வம்: ஆமாண்ணே... மனுத்தாக்கல் செய்யவந்த தொண்டரை நாம அடிச்சு விரட்டுனதுலருந்தே அது எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்ல..!

@LAKSHMANAN_KL

இ.பி.எஸ்: இந்த வாட்ச்ல இருக்குற ரெண்டு முள் மாதிரி, நாம ஒற்றுமையா இருக்கணும்ணே...

ஓ.பி.எஸ்: அதுசரி. ஆனா, சின்ன முள் யாரு... பெரிய முள் யாருனு தொண்டர்கள்தான் முடிவு பண்ணணும்.

@balasubramni1

இ.பி.எஸ்: இந்த வாட்ச் எங்கே எடுத்தது தெரியுமா?

ஓ.பி.எஸ்: அன்னைக்குத் தரையில தவழ்ந்து போனீங்களே... அங்கே எடுத்ததா?

@vaduganvedhai

``முதல்ல, இந்தக் கடிகாரத்துல இருக்குற சின்ன முள்ளைக் கழற்றி வீசணும். அதைப் பார்த்தா சின்னம்மா ஞாபகம் வந்து பக்பக்குங்குது!’’

@San8416

இ.பி.எஸ்: நம்ம கட்சித் தேர்தல் மாதிரியே, சட்டமன்றத் தேர்தலிலும் யாரையுமே மனுத்தாக்கல் பண்ணவிடலைன்னா... நான்தான் சி.எம்... நீங்க துணை சி.எம். என்ன சொல்றீங்க?

ஓ.பி.எஸ்: மறுபடியும் துணை சி.எம்-தானா?!

@shantweetzz

ஓ.பி.எஸ்: என்னங்க புது வாட்சுன்னு சொன்னீங்க... டைம் ஓடவே மாட்டேங்குது... எப்பப் பார்த்தாலும் ஏழரைன்னே காமிக்குது!

Facebook

Sathia Moorthi

“டைம் லூப்ல பின்னோக்கிப் போய்... `தவழும் வீடியோ’வை ‘டெலிட்’ பண்ண முடியுமான்னு பார்க்கணும்!”

Marudha Balan

“ஒத்த செருப்புகள்லாம் கரெக்ட்டா இத்தனை மணிக்குத்தாங்க என் கார் முன்னடி வந்து விழுந்தது... நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...”

Sanjeevi Bharathi

“இந்த வாட்ச் எல்லா நாட்டு டைமும் காட்டும்ணே..!”

“அப்போ... கொடநாட்டு டைமையும் காட்டுமா..?”

Ravindran Kannan

இ.பி.எஸ்: கடிகாரத்தில் சின்ன முள்ளைப் பெரிய முள் பின்தொடர்வதுபோல நீங்கள் என்னைப் பின்தொடர வேண்டும்.

ஓ.பி.எஸ்: சின்னம்மா விநாடி முள்போல் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தால் நாம் என்ன செய்வதாம்?

Raja Gopal

ஓ.பி.எஸ்: வாட்ச் மாட்டுனதும் உங்க கையே அழகா இருக்குங்க...

இ.பி.எஸ்: ‘அப்படியே விலங்கு மாட்டுனா இன்னும் சூப்பரா இருக்கும்’ங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் நல்லாவே கேட்குதுங்க... ரொம்பத் தப்புங்க!

மலர் சூர்யா

இ.பி.எஸ்: டைம் ஆகிடுச்சு. நான் கோட்டைக்குப் போய் கையெழுத்து போடணும்...

ஓபிஎஸ்: போன் வயர் பிஞ்சு போய் ஆறு மாசமாகுது!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan