Published:Updated:

போட்டோ தாக்கு

ஸ்டாலின் - ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் - ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமையணும்னு நம்ம ஆளுங்க கனவு காணுறாங்க ஸ்டாலின் ஜி...

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

ராகுல்: தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமையணும்னு நம்ம ஆளுங்க கனவு காணுறாங்க ஸ்டாலின் ஜி...

ஸ்டாலின்: அது உங்க பிரதமர் கனவைவிட டஃபான கனவாச்சே..?!

@IamUzhavan

ஸ்டாலின்: அறிவாலயத்துல ஜிம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்... நீங்க வந்துதான் பத்து தண்டால் எடுத்து ஜிம்மைத் திறந்துவைக்கணும்!

ராகுல்: நான் சைக்கிள் கடை ஆரம்பிச்சா... நீங்க வந்துதான் திறந்துவைக்கணும்!

@LAKSHMANAN_KL

ராகுல்: இந்தப் புத்தகத்தைப் படிச்சபோது... கலைஞரோட எழுத்துகளில் ஒரு ‘அக்னி’ இருக்கிறதை உணர்ந்தேன் ஸ்டாலின் ஜி...

ஸ்டாலின்: சத்தம் போட்டுச் சொல்லாதீங்க... 5 கோடி ரூவா கேட்டு வந்துடப் போறாங்க..!

@amuduarattai

ராகுல்: ‘கூட்டணிக் கட்சியிடமிருந்து அதிக சீட்டுகள் பெறுவது எப்படி?’னு எங்க பாட்டி எழுதிய இந்தப் புத்தகத்தைப் படிங்க ஸ்டாலின் ஜி...

ஸ்டாலின்: ‘கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த சீட்டை ஒதுக்குவது எப்படி?’னு எங்க அப்பா எழுதிய இந்தப் புத்தகத்தைப் படிங்க

ராகுல் ஜி...

@parveenyunus

ஸ்டாலின்: ‘பா.ஜ.க-வைச் சமாளிப்பது எப்படி?’ங்கற புத்தகம் அப்புறம் தர்றேன்...

ராகுல்: ‘மம்தாவைச் சமாளிப்பது எப்படி?’ங்கற புத்தகம் கொடுத்தீங்கன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும்!

FACEBOOK

Sathia Moorthi

“இதுக்கே இப்படி ஆச்சர்யப்பட்டா எப்படி..? இது உங்க கட்சியோட ஒரு தொகுதியின் ‘கோஷ்டி’ பட்டியல்தான். இன்னும் 233 ‘புக்’ இருக்கு!”

Vaira Bala

ஸ்டாலின்: நீங்க சிம்பிளா பைஜாமா குர்தா மட்டும் போட்டா... நம் மக்கள் எப்படி ஓட்டுப்போடுவாங்க? இதில், கடந்த ஆறு வருடங்களில் நம்ம ஜி போட்ட வேரியஸ் மேக்கப் & கெட்டப் போட்டோஸ் இருக்கு. கத்துக்கோங்க!

Mannargudi Rajagopal

ராகுல்: புத்தகத்தோட முதல் பக்கத்துல என்னவோ எழுதியிருக்கீங்களே... புரியலை.

ஸ்டாலின்: ‘உத்தரப்பிரதேசத்தை வெல்ல உடன்பிறப்பின் வாழ்த்துகள்’ அப்படிங்கிறதைத்தான் சுருக்கமா ‘உ.பி-யை வெல்ல உ.பி-யின் வாழ்த்துகள்’னு எழுதியிருக்கேன்!

Mathi Vaanan

ஸ்டாலின்: குடிசைகளே இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதுதான் என் லட்சியம்...

ராகுல் காந்தி: ஐயய்யோ... அப்போ நான் பிரசாரத்துக்கு வரும்போது எங்க போய் சாப்பிடறது?

Rajasingh Jeyakumar

“இது, ‘காலாவதியான கட்சியைக் காப்பாற்ற பாடாவதி ஐடியாக்கள் ஆயிரம்’ங்கிற புத்தகம். உங்களுக்குப் பயன்படுமான்னு பாருங்க ராகுல்!”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan