Published:Updated:

போட்டோ தாக்கு

மோடி, ஸ்டாலின், கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, ஸ்டாலின், கனிமொழி

பொங்கலுக்கு அழைச்சதால எங்க மேல உங்களுக்குக் கோபம் இல்லைங்களே ஜி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@balasubramni1

மோடி: ஏன்... இப்பவும் ‘கோபேக் மோடி’ன்னே டிரெண்ட் பண்றாங்க?

ஸ்டாலின்: ‘கோ’ என்றால் அரசன். ‘பேக்’ என்றால் பின்னாடி. நீங்க பின்னாளில் அரசனாவீர்கள்னு டிரெண்ட் பண்றாங்க ஜி!

@LAKSHMANAN_KL

ஸ்டாலின்: சீக்கிரமே தி.மு.க-காரங்க எல்லாரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கணுமா... ஏன் ஜி?!

மோடி: ‘பா.ஜ.க எதிர்ப்பு சக்தி’ குறைஞ்சிட்ட மாதிரி தெரியுதே... அதான்..!

@Kirachand4

ஸ்டாலின்: என்ன மோடி ஜி... மூணு செங்கல் கொண்டுவந்துருக்கீங்க... எய்ம்ஸ் மருத்துவமனைக்கா?

மோடி: அதுக்குன்னா ஒத்த செங்கல்தானே கொண்டுவந்திருப்பேன்... இது பொங்கல் பானை வைக்க ஜி!

@Vkarthik_puthur

ஸ்டாலின்: பொங்கலுக்கு அழைச்சதால எங்க மேல உங்களுக்குக் கோபம் இல்லைங்களே ஜி..?

மோடி: நான் எதுக்காகக் கோபப்படணும்?

ஸ்டாலின்: இல்லை ஜி, ‘வடை’ சுடுற உங்களைப் பொங்கல்வைக்க அழைச்சிட்டோம் அதான்!

@amuduarattai

ஸ்டாலின்: என்னது... கறுப்பு பலூன் பறக்கவிடுறதுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி போடப்போறீங்களா!?

@LAKSHMANAN_KL

ஸ்டாலின்: தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியை எப்ப ஒதுக்குவீங்க ஜி?

மோடி: அதான்... உதயநிதி, இன்பநிதி, அருள்நிதி, தயாநிதினு உங்ககிட்ட எக்கச்சக்கமான ‘நிதி’ இருக்கே ஸ்டாலின்!

FACEBOOK

H Umar Farook

``தமிழ்நாட்டில் பொங்கலோடு வடை சாப்பிடுவதுதான் வழக்கம். பொங்கல் நாங்க தர்றோம்... வடை நீங்க சுடுங்க ஜி!’’

Mannargudi Rajagopal

“கையை விட்டீங்கன்னா இன்னைக்கே கனிமொழியை அமைச்சராக்கிடுறேன்...”

“நிஜமாவா சொல்றீங்க ஜி?”

“நான் சொன்னது அந்தக் ‘கை’யை!”

Deva Rakki

ஸ்டாலின்: அமித் ஷா ஜி வர முடியலையா...? சரி, சரி பரவால்லை... ‘சந்தானபாரதி’யை வெச்சு சாமாளிச்சுக்கலாம்!

M Peter Francisca

மோடி: அந்த ஒத்தச் செங்கல்லை எனக்குத் தர முடியுமா?

ஸ்டாலின்: சாரி ஜி... உதயநிதியின் அடுத்த பட பூஜைக்குப் போயிருக்கு!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan