Published:Updated:

போட்டோ தாக்கு

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

சசிகலாவைச் சந்தித்த விஜயசாந்தியைக் கட்சியைவிட்டு நீக்குகிறேன்!”

போட்டோ தாக்கு

சசிகலாவைச் சந்தித்த விஜயசாந்தியைக் கட்சியைவிட்டு நீக்குகிறேன்!”

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

பன்னீர்: இது என்ன... கவர்னர்கிட்ட கொடுக்கவேண்டிய மனுவா..?

எடப்பாடி: இல்லண்ணே... அடுத்த ரெய்டுகளின்போது தொண்டர்களுக்கு நாம போடப் போற மீல்ஸ் மெனு..!

@IamUzhavan

“ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க, எத்தனை வகையான ஆடுகளுக்கு தாடி இருக்கிறது, ஆடுகளின் அத்தனை வகை தாடிகளின் முக்கியத்துவம் என்ன... என்கிற புள்ளிவிவரங்களை எடுத்து, அதை ஆளுநரிடம் கொடுக்கச் சென்று கொண்டிருக்கிறோம்!”

@Vkarthik_puthur

எடப்பாடி: வழக்குகளைக் கண்டு அஞ்சக்கூடிய கட்சி அல்ல அ.தி.மு.க!

பன்னீர்: ஆமாமா... சின்னம்மாவைக் கண்டா மட்டும் அஞ்சக்கூடிய கட்சி!

@RavindranKanna2

எடப்பாடி: பதவியைப் பிடிக்க நான் காட்டிய வழியை மறந்துவிடாதீர்கள். தவழ்ந்து சென்றாவது வாக்காளர்களின் காலில் விழுந்து... வெற்றிவாகை சூடுங்கள்!

@saravankavi

இ.பி.எஸ்: 27 அமாவாசைக்குள் தி.மு.க ஆட்சி முடிவுக்கு வரும்.

ஓ.பி.எஸ்: ஒருவேளை அப்படி வரலைன்னா?

இ.பி.எஸ்: 27 அமாவாசைகளும் 27 பெளர்ணமிகளும் முடிவுக்கு வரும்!

@LAKSHMANAN_KL

இ.பி.எஸ்: நாங்கள் ஆட்சி செய்தபோது, இந்தி, சம்ஸ்கிருதத் திணிப்பில் மத்திய பா.ஜ.க அரசுக்கு உதவுவதாக எங்களைக் குற்றம்சாட்டிய திமுக... இப்போது சன் பிக்சர்ஸின் ‘பீஸ்ட்’ படப் பாடல் மூலமாக, அரேபிய மொழித் திணிப்புக்கு உதவுவது மட்டும் என்ன நியாயம்?!

@h_umarfarook

எடப்பாடி: சசிகலாவைச் சந்தித்த விஜயசாந்தியைக் கட்சியைவிட்டு நீக்குகிறேன்!”

பன்னீர்: “தலைவரே அவங்க நம்ம கட்சியிலேயே இல்லை!”

FACEBOOK

Jiya Sen

எடப்பாடி: இது அமாவாசைப் பட்டியல்... கட்சியிலுள்ள அமாவாசைகளின் பட்டியலானு கேட்காதீங்க... அ.தி.மு.க ஆட்சி அமைய நாம் கடக்கவேண்டிய அமாவாசைகளின் பட்டியல்!

Sanjeevi Bharathi

எடப்பாடி: ஆட்சியைக் கலைக்கச் சொல்லி கவர்னருக்கு மனு கொடுக்கப் போறோம்...

பன்னீர்: பழக்க தோஷத்துல கவர்னர் மனுவைத் திருப்பி அனுப்பிடப்போறார்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism