ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@chennappan10
“சத்தியமா சொல்றேங்க்கா... மோடி மட்டும் இப்போ என்னை உக்ரைனுக்கு அனுப்பினா, ஒட்டுமொத்த மக்களையும் ஒரே போட்ல ஏத்திக்கிட்டு வந்துருவேன்!”
@LAKSHMANAN_KL
“ஜி அளவுக்கு இல்லாட்டாலும்... ஓரளவுக்கு வடை சுடுவேன்... என்னை நம்புங்க ப்ளீஸ்..!”
@IamUzhavan
“உண்ணாவிரதத்துக்கு வரும்போது, காலையிலேயே கழுத்து வரைக்கும் சாப்பிட்டுட்டு வந்துரணும். அதுவே ஊர்வலம்னா, போகிற வழியில பிரியாணி சாப்பிடுறதுக்கு ஏத்த மாதிரி வெறும் வயித்தோட வரணும்!”
@IamUzhavan
“அந்தக் கொங்குநாடு கோரிக்கை என்னாச்சு தம்பி... எப்ப பிரிக்கப்போறோம்?”
“ஐயோ அக்கா... கொங்குநாடெல்லாம் வேண்டாம். குமரிநாடு வேணும்னு கேட்போம்!”
@saravankavi
“நம்ம கட்சியில சேர்ந்து பாருங்க... தோல்வி பயமே இருக்காதுக்கா!”
“ஈஸியா ஜெயிச்சுடலாம்னு சொல்றீங்களா?”
“இல்லல்ல... தோல்வி நல்லாப் பழகிடும்!”
Jiya Sen
“நீங்க தேர்தல்ல தோற்றிருக்கலாம். அதுக்காக, என்னைப் பார்த்ததும் ‘நம்மில் யார் அடுத்த கவர்னர்?’ என்று கேள்வி எழுப்புவது ரொம்பத் தப்பு சிஸ்டர்!”
Vaira Bala
``அம்மா... சொன்னா கேளுங்க... எனக்கு உண்மையிலேயே உங்க ஆடு எங்க போச்சுனு தெரியாது. என்கிட்ட வந்து கேட்கிறீங்களே... இதை நான் என்னான்னு சொல்றது?!’’
Ashok
“கையில் கறுப்பு சிவப்புக் கயிறு கட்டியிருப்பதைப் பார்த்து, நான் கட்சி மாறிட்டேன்னு நினைக்க வேண்டாம். நான் எப்போதும் பாரதிராஜா கட்சிதான்!”
Sanjeevi Bharathi
“உள்ளாட்சித் தேர்தல்ல முந்நூத்திச் சொச்சம் வேட்பாளர்கள் ஜெயிச்சுட்டாங்கனு கேள்விப்பட்டதும் அப்படியே நான் ஷாக்காகிட்டேன்..!”
ராம்ஆதிநாராயணன்
“சொன்னா நம்புங்க... சத்தியமா சொல்றேன்... நான் கையில கட்டியிருக்கிறது ‘திராவிட மாடல்’ கயிறு இல்லக்கா!
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.