Published:Updated:

போட்டோ தாக்கு

ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர்

அந்நேரம் நான் மிக்சர் சாப்பிட்டுட்டு இருந்ததால `தெரியாது’னு சொல்லி சமாளிச்சிட்டேன் தம்பி..

போட்டோ தாக்கு

அந்நேரம் நான் மிக்சர் சாப்பிட்டுட்டு இருந்ததால `தெரியாது’னு சொல்லி சமாளிச்சிட்டேன் தம்பி..

Published:Updated:
ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

விஜயபாஸ்கர்: அம்மா இட்லி சாப்பிட்டதைப் பத்தி ஆணையத்துல ஏதும் கேட்டாங்களா அண்ணே..?!

ஓ.பி.எஸ்: அந்நேரம் நான் மிக்சர் சாப்பிட்டுட்டு இருந்ததால `தெரியாது’னு சொல்லி சமாளிச்சிட்டேன் தம்பி..!

@Kirachand4

விஜயபாஸ்கர்: உங்களோட அடுத்த தர்மயுத்தப் போராட்டம் என்னண்ணே?

பன்னீர்செல்வம்: விசாரணைங்கிற பேர்ல டார்ச்சர் கொடுக்குறாங்கன்னு ஆறுமுகசாமி கமிஷனை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தலாம்னு இருக்கேன்...

@Vkarthik_puthur

ஓ.பி.எஸ்; பாஸ்கர் தம்பி... மொதல்ல எல்லாரும் ‘ஆறுமுகசாமி ஆணையத்துக்கிட்ட நான் மாட்டிக்கிட்டேன்’னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க... நான் பதில் சொன்ன பிறகுதான் ‘ஆறுமுகசாமி ஆணையம்தான் என்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கு’னு அவங்களுக்கே தெரிஞ்சுதாம்!

@RavindranRasu

விஜயபாஸ்கர்: அரசியல்ல நீங்க கடைப்பிடிக்கும் மூணு மந்திரங்களைச் சொல்லுங்களேன்!

ஓ.பி.எஸ்: தெரியாது... பார்க்கவேயில்லை... நினைவில்லை!

@Anvar_officia

ஓ.பி.எஸ்: இங்க பாருங்க... பா.ஜ.க கொடியில இருக்குற எல்லா கலர்லயும் கயிறு கட்டியிருக்கேன்... காப்பாத்துவாங்கதானே?

@JaNeHANUSHKA

விஜயபாஸ்கர்: 150 கேள்விகள் கேட்டும் எப்படிண்ணே அசராம ‘ஒரே பதில்’ சொல்லியிருக்கீங்க?

ஓ.பி.எஸ்: ஒரே நாடு... ஒரே பதில்!

FACEBOOK

Ajmal Khan S

‘‘ஆணையர் கேள்விக்கு உம்முன்னும், அம்மையாரைப் பத்தின கேள்விக்கு கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு போயிரும்!’’

Mannargudi Rajagopal

‘‘எப்படிப் பார்த்தாலும் எடப்பாடியாரைவிட நீங்கதான் டாப் அண்ணே...’’

‘‘எப்படிச் சொல்றீங்க தம்பி?’’

‘‘ஆமாண்ணே... அவராச்சும் முதல்வர், முன்னாள் முதல்வர் மட்டும்தான். நீங்க முதல்வர், முன்னாள் முதல்வர், துணை முதல்வர், முன்னாள் துணை முதல்வர்...’’

‘‘போதும்... போதும்... எனக்கே கொஞ்சம் ஓவரா தோணுது...’’

வி.சி.கிருஷ்ணரத்னம்

விஜயபாஸ்கர்: ‘தெரிந்த உண்மைகளைச் சொன்னேன்’னு பேட்டி கொடுத்திருக்கீங்களே... அது என்ன உண்மை அண்ணே?

ஓ.பி.எஸ்: ‘தெரியாது’ங்கிற உண்மைதான் தம்பி!

Ravikumar Krishnasamy

வி.பாஸ்கர்: எத்தனை கேள்வி கேட்டாங்கண்ணே!

ஓ.பி.எஸ்: ‘தெரியாது’ அப்படிங்கிற ஒரே பதிலுக்கு, 78 கேள்விகள் கேட்டாங்க!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan