Published:Updated:

போட்டோ தாக்கு

ஸ்டாலின் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - மோடி

அண்ணாமலையைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள் ஜி

போட்டோ தாக்கு

அண்ணாமலையைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள் ஜி

Published:Updated:
ஸ்டாலின் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - மோடி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

Twitter

@LAKSHMANAN_KL

மோடி: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பாருங்க ஜி... செம சூப்பரா இருக்கு..!

ஸ்டாலின்: பேசாம... ‘காவிச்சட்டை மாறன்’ங்கிற புனைபெயர்ல நீங்க சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சுடவேண்டியதுதானே ஜி?!

@Kirachand4

மோடி: 2026-ல் மறுபடியும் ஒத்தச் செங்கல்லைத் தூக்கி ஆட்சியைப் பிடிக்க பிளான் பண்ணுவீங்களா ஜி?

ஸ்டாலின்: எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி போற போக்கைப் பார்த்தா, 2056-ம் ஆண்டு வரை செங்கல்லைத் தூக்கி ஆட்சியைப் பிடிக்க எங்களுக்கு வாய்ப்பு இருக்கும் ஜி!

@LAKSHMANAN_KL

மோடி: தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் என்னோட மிகப்பெரிய சொத்தாக நினைக்கிறேன் ஸ்டாலின் ஜி..!

ஸ்டாலின்: அதான்... சொத்து வரியை ஏத்திட்டோம் ஜி!

@parveenyunus

மோடி: அடுத்து எந்த வெளிநாட்டுக்குப் பயணம்?

ஸ்டாலின்: எத்தனையோ நாட்டுக்குப் போய் வந்த நீங்க சந்தோஷமா இருக்கீங்க. ஒரே ஒரு துபாய்க்குப் போயிட்டு வந்து நான் படுற அவஸ்தை இருக்கே.. ஐய்யய்யோ..!

@LAKSHMANAN_KL

மோடி: ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பார்த்தேன்... ரொம்ப நல்லா இருக்கு ஜி!

ஸ்டாலின்: அப்படியே... நீட் தேர்வு விலக்கு ஃபைல்ஸ், மேக்கேதாட்டு அணை விவகார ஃபைல்ஸ், ஏழு பேர் விடுதலை ஃபைல்ஸையும் பார்த்தீங்கன்னா புண்ணியமாப் போகும்!

@rishivandiya

“அந்த 1,000 ரூபாய் என்ன ஆச்சு ஸ்டாலின் ஜி?”

“அந்த 15 லட்ச ரூபாய் என்ன ஆச்சு மோடி ஜி?”

Facebook

Ravindran Kannan

ஸ்டாலின்: அண்ணாமலையைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள் ஜி.

மோடி: அவர் ஏற்கெனவே 20,000 புத்தகங்கள் வாசித்துவிட்டார். இனி வாசிக்க மாட்டார்!

Mannargudi Rajagopal

“வாங்க ஸ்டாலின் ஜி... டெல்லியிலே என்னென்ன பார்த்தீங்க?”

“கெஜ்ரிவாலோட ஒரு ‘மாதிரிப் பள்ளி’யைப் பார்த்தேன் ஜி...”

“இதென்ன பிரமாதம்... உ.பி-க்கும் குஜராத்துக்கும் வந்து பாருங்க... ‘ஒரு மாதிரியான பள்ளி’யையே நிறைய பார்க்கலாம்!”

Ambai Deva

ஸ்டாலின்: பெட்ரோல், டீசல் விலையை எப்ப குறைப்பீங்க ஜி?

மோடி: அடுத்து ஏதாவது தேர்தல் வருதான்னு தேர்தல் கமிஷன்கிட்ட கேட்கணும் ஜி!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism