Published:Updated:

போட்டோ தாக்கு

கனிமொழி, குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி, குஷ்பு

ஏதோ ஒரு கட்சி பிரசாரத்துக்குப் போனபோது எடுத்தது. எந்தக் கட்சிக்குனு ஞாபகமில்லை!

போட்டோ தாக்கு

ஏதோ ஒரு கட்சி பிரசாரத்துக்குப் போனபோது எடுத்தது. எந்தக் கட்சிக்குனு ஞாபகமில்லை!

Published:Updated:
கனிமொழி, குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி, குஷ்பு

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@absivam

கனிமொழி: யாருக்கு இந்த சீட்?

குஷ்பு: அடுத்த ஆளுநருக்கு!

கனிமொழி: யாரு... இளையராஜாவுக்கா?!

குஷ்பு: இல்லை... ஹெச்.ராஜாவுக்கு!

@saravankavi

குஷ்பு: நீங்கல்லாம் ஈஸியா எம்.பி ஆகிட்டீங்க. நான் பல கட்சிக்கு எம்பி எம்பி குதிச்சும்

எம்.எல்.ஏ-கூட ஆக முடியலை!

@PG911_twitz

கனிமொழி: ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்லயே இளையராஜாவுக்கு ராஜ்ய சபா பதவி கிடைக்கும்னு பேசிக்கிறாங்களே... உங்களுக்கு ஒண்ணும் இல்லையா?

குஷ்பூ: நானும் காந்தி பிறந்தநாள் அன்னிக்கு, காந்தியையும் மோடியையும் ஒப்பிட்டுப் புகழ்ந்து பேசலாம்னு இருக்கேன்!

@RavindranRasu

கனிமொழி: நீங்க சாதாரண அரசியல்வாதி இல்லை. ‘பான் இந்தியா’ அரசியல்வாதி!

குஷ்பு: ஏன் அப்படிச் சொல்றீங்க?

கனிமொழி: பின்னே... மாநிலக் கட்சி முதல் தேசியக் கட்சிகள் வரை எல்லாத்துலயும் உறுப்பினரா இருந்திருக்கீங்களே!

@NedumaranJ

கனிமொழி: `இ.பி.எஸ் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி’னு சொல்லியிருக்கிறாரே உங்க தலைவர் அண்ணாமலை?

குஷ்பூ: எங்களுக்கும் காமெடி நல்லா வரும்னு இப்போவாவது நம்புறீங்களா?

@LAKSHMANAN_KL

கனிமொழி: ஒருகாலத்தில்... ‘குஷ்பு இட்லி’ செம ஃபேமஸா இருந்துச்சுல்ல?

குஷ்பு: அதைத்தான்... ‘அப்போலோ இட்லி’ அமுக்கிடுச்சே!

@JaNeHANUSHKA

கனிமொழி: நீங்க வலதுசாரியா... இடதுசாரியா?

குஷ்பு: எப்பவும் நான் ஹேண்ட்லூம் ‘ஸாரி’தான்!

@LAKSHMANAN_KL

கனிமொழி: அறிவாலயத்திலிருந்து கமலாலயத்துக்கு எப்படிப் போனீங்க?

குஷ்பு: சத்தியமூர்த்தி பவன் வழியாத்தான்..!

@balasubramni1

குஷ்பு: `விக்ரம்’ல கமல் சார் கலக்கியிருப்பார்போல!

கனிமொழி: ஓ... புரிஞ்சுடுச்சு. அடுத்து மய்யத்துக்குத் தாவப்போறீங்க. கரெக்டா?

FACEBOOK

Ravikumar Krishnasamy

கனிமொழி: இந்தச் சேலை உங்களுக்கு எடுப்பா இருக்கு. எங்கே எடுத்தது?

குஷ்பு: ஏதோ ஒரு கட்சி பிரசாரத்துக்குப் போனபோது எடுத்தது. எந்தக் கட்சிக்குனு ஞாபகமில்லை!

R Prasanna

கனிமொழி: சீட் காலியாத்தானே இருக்கு. இதுக்கு வாங்களேன்...

குஷ்பு: காலியா இருந்தா மட்டும் பத்தாது. ‘காவி’யாகவும் இருக்கணும்!

Mannargudi Rajagopal

கனிமொழி: இப்போல்லாம் நீங்க ஏன் அதிகமா சினிமாவுல நடிக்கிறதில்ல?

குஷ்பு: எங்கங்க... அரசியல்ல நடிக்கிறதுக்கே நேரம் சரியாயிருக்கு!

Ravikumar Krishnasamy

கனிமொழி: உங்களுக்கு அம்பேத்கரைத் தெரியுமா?

குஷ்பு: யாரு... ‘ஜி’யோட கம்பேர் பண்ணி இளையராஜா யாரையோ சொன்னாரே... அவரா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism