Published:Updated:

போட்டோ தாக்கு

அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா

ஜிக்கு ஆதரவா பேசின ‘இசைஞானி’யைவெச்சு எனக்குப் பட்டம் கொடுக்க பிளான் பண்ணிருக்கீங்களா... என்ன பட்டம்?

போட்டோ தாக்கு

ஜிக்கு ஆதரவா பேசின ‘இசைஞானி’யைவெச்சு எனக்குப் பட்டம் கொடுக்க பிளான் பண்ணிருக்கீங்களா... என்ன பட்டம்?

Published:Updated:
அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா
அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா

TWITTER

@LAKSHMANAN_KL

ஹெச்.ராஜா: அவர் பேரென்ன அண்ணாமலையா இல்லை அனுமார்மலையா... சுற்றுப்பயணம் போயிட்டு வந்த ராசிக்கு, இலங்கையே கொளுந்துவிட்டு எரிஞ்சுண்டிருக்கு..?

@RavindranRasu

அர்ஜுன் சம்பத்: அடுத்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் என்ன பண்ணுவீங்க?

ஹெச்.ராஜா: புது வீடு பக்கத்துல ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டி பால் காய்ச்சிடுவேன்!

@PG911_twitz

அர்ஜுன் சம்பத்: ஏன்ணே உங்களுக்கு இன்னும் எந்தப் பதவியும் தரலை?

ஹெச்.ராஜா: ஒரு முறை தோத்திருந்தா உடனே பதவி கொடுத்திருப்பாங்க... ஓராயிரம் முறையில்ல தோத்திருக்கேன்... எந்தப் பதவி கொடுக்குறதுன்னு குழப்பத்துல இருக்காங்களாம்!

@LAKSHMANAN_KL

ஹெச்.ராஜா: ஜிக்கு ஆதரவா பேசின ‘இசைஞானி’யைவெச்சு எனக்குப் பட்டம் கொடுக்க பிளான் பண்ணிருக்கீங்களா... என்ன பட்டம்?

அர்ஜுன் சம்பத்: ‘வசை’ஞானி பட்டம்தான்!

@JaNeHANUSHKA

அர்ஜுன் சம்பத்: ஆனாலும் அந்த அண்ணாமலைக்குக் கல்நெஞ்சம்ணே... அட்லீஸ்ட் ‘மொழிபெயர்ப்பாளர் பிரிவு’ தலைவராவாவது உங்களை அறிவிச்சுருக்கலாம்!

@RavindranRasu

ஹெச்.ராஜா: சமீபத்துல நம்ம ஜிகிட்டருந்து ஒரு நல்ல விஷயத்தைக் கத்துக்கிட்டேன்!

அர்ஜுன் சம்பத்: அப்படியா... என்ன அது?

ஹெச்.ராஜா: பத்திரிகையாளர்களைப் பார்த்தா ‘ஓ மை காட்’னு ஓடிடணும்!

@CaptainSaab10

அர்ஜுன் சம்பத்: ராஜாண்ணே... இலங்கை பிரதமர் ராஜபக்சே தப்பிச்சு வெளிநாடு போயிட்டாராமே?

ஹெச்.ராஜா: அட நீ வேற... நம்ம ஆளே பல வருஷமா நாட்டுல எந்தப் பிரச்னைன்னாலும் தப்பிச்சு வெளிநாடுதானே போயிட்டிருக்கார்... போவியா!

FACEBOOK

Ambai Deva

அர்ஜுன்: என்னண்ணே வருத்தமா இருக்கீங்க?

ராஜா: அடுத்த கவர்னர்கள் லிஸ்ட்ல என் பேருக்கு முன்னாடி என் அட்மினோட பேர் இருக்காம்!

Mohamed Humayoon

அர்ஜுன்: அரசியல்ல முன்னுக்கு வர்றதுக்கு நல்ல ஒரு ஐடியா கொடுங்கண்ணே!

ராஜா: உங்க ‘இந்து மக்கள் கட்சி’ பெயரை ‘இந்தி மக்கள் கட்சி’னு மாத்தினாலே போதும்!

Ambai Deva

ராஜா: ஒரு சந்தேகம்?

அர்ஜுன்: என்னண்ணே?

ராஜா: கவர்னர் ஆனா புது வீடு கட்டலாமா?

Jiya Sen

அர்ஜுன்: அண்ணே... சென்னையில் கனமழையாம்!

ராஜா: அண்ணாமலைகிட்ட அந்தப் படகை இரவல் கேட்டுப் பார்க்கட்டுமா?

Ambai Deva

அர்ஜுன்: கட்சி வேலைகள் எப்படிப் போகுது?

ராஜா: ஆங்... எல்லாம் போகுது போகுது... இன்னொரு தேர்தல் வந்தா வீட்டு வேலைகளை முடிச்சிடலாம்னு பார்க்குறேன்... ஷனியன் வர மாட்டேங்குது!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism