Published:Updated:

போட்டோ தாக்கு

ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

ஆனா... பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் தவிக்கும் மக்கள் எழுப்புகிற குரலை மட்டும் காதிலேயே வாங்கிக்க மாட்டார்!

போட்டோ தாக்கு

ஆனா... பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் தவிக்கும் மக்கள் எழுப்புகிற குரலை மட்டும் காதிலேயே வாங்கிக்க மாட்டார்!

Published:Updated:
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@balasubramni1

ரவி: என்னை எதுக்கு ‘நிழல்கள்’ ரவின்னு சொல்றீங்க?

ஸ்டாலின்: ஒன்றிய அரசின் நிழல்போலவே நீங்க செயல்படுவதால்தான்!

@RavindranKanna2

ஸ்டாலின்: `இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் தமிழகம்’ என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

ஆளுநர்: உங்கள் துணைவியார் நீங்கள் முதல்வரானதற்கு கோயில் கோயிலாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகிறாரே... அந்த ஆன்மிகத்தை வைத்துத்தான்!

@PrakashMathiy

கவர்னர்: Me 1976 IPS Batch!

முதல்வர்: Me Muthuvel Karunanidhi Stalin... 1976 MISA Batch!

@LAKSHMANAN_KL

ரவி: அடிக்கடி பிரதமருக்குக் கடிதம் எழுதிக்கிட்டே இருப்பீங்கபோல..?

ஸ்டாலின்: நாங்க ‘திராவிட மாடல்’ அரசு மட்டுமல்ல, திராவிட ‘மடல்’ அரசும்கூட!

@Kirachand4

ஸ்டாலின்: இன்று உங்கள் முகம் சூரியன் மாதிரி பிரகாசமாக இருக்கு ஜி..!

ரவி: இன்று உங்கள் முகம் தாமரையாக மலர்ந்திருக்கு ஜி..!

@LAKSHMANAN_KL

ஸ்டாலின்: உதயநிதியோட ‘நெஞ்சுக்கு நீதி’ பாருங்க..!

ரவி: ஜியோட ‘மனதின் குரல்’ கேளுங்க..!

@JaNeHANUSHKA

ஸ்டாலின்: நல்லா கிளீன் ஷேவ் பண்ணிட்டு வந்திருக்கீங்களே?

ரவி: (புன்னகைக்கிறார்) `ஆட்டுக்கு தாடி எதுக்கு?’ன்னு நேத்து வரைக்கும் பேசிக்கிட்டிருந்தீங்க. `கவர்னருக்கு தாடி எதுக்கு?’னு இன்னைக்கு ஏதாவது பேசிடக் கூடாதுன்னுதான்!

@balasubramni1

இருவரின் மைண்ட் வாய்ஸ்: இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன். நீயும் வரக் கூடாது... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!

FACEBOOK

Ambai Deva

ஆளுநர்: உங்ககூடக் கொஞ்சம் பேசணும்... இந்தி தெரிஞ்ச ஒரு ஆளைக் கூட்டிட்டு வாங்க..!

ஸ்டாலின்: ஓ... அப்படியா... அந்த பானிபூரி விக்கிற தம்பியைக் கூப்பிடுங்க!

Pamaran Paramaguru

முதல்வர்: நான் ‘திராவிட மாடல்’ முதல்வர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

ஆளுநர்: நான் ‘டெல்லி மாடல்’ ஆளுநர் என்பதை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்!

மூ.மோகன்

கவர்னர்: எங்க ஜி, மயிலோட பசியைக்கூட தாங்கிக்க மாட்டார்!

முதல்வர்: ஆனா... பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் தவிக்கும் மக்கள் எழுப்புகிற குரலை மட்டும் காதிலேயே வாங்கிக்க மாட்டார்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan