ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@NedumaranJ
மோடி: என்ன யோகி ஜி... தலைவர்கள் படத்தை பிரமாண்டமா பேனர் அடிக்கச் சொன்னா, உங்க படத்தை மட்டும் பெருசா அடிச்சுவெச்சுருக்கீங்க?
யோகி: ‘ஒரே நாடு... ஒரே தலைவர்’ ஜி!
@RavindranRasu
யோகி: எப்படி பத்து லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப்போறீங்க ஜி?
மோடி: நாடு முழுவதும் ஆங்காங்கே என்னைப் படம் பிடிக்க போட்டோகிராபர்களை நியமிக்கப்போகிறேன்!
@JaNeHANUSHKA
மோடி: உங்க மாநிலத்தில் குற்றங்கள் பதிவாவது குறைஞ்சிடுச்சாமே... என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
யோகி: புகார் குடுக்க வர்றவங்களை அரெஸ்ட் பண்ணி உள்ளவெக்கச் சொன்னேன்... ஜி!
@RavindranRasu
யோகி: மக்களே இல்லாத பக்கம் யாரைப் பார்த்துக் கும்பிடுறீங்க!
மோடி: நான் எப்பவுமே கும்பிடுறது என்னுடைய போட்டோகிராபர்களைத்தான். மக்களை அல்ல!
@balasubramni1
மோடி (மைண்ட் வாய்ஸ்): என்னையவாடா திட்டுறீங்க... பொறுங்க, அடுத்து யோகியைப் பிரதமராக்கி, இவருக்கு நீங்க எவ்வளவோ பரவாயில்லைன்னு உங்க வாயாலேயே சொல்லவெக்கிறேன்!
@chennappan10
மோடி: ஏன் அந்தப் பக்கம் போகக் கூடாதுன்னு சொல்றீங்க யோகி..?
யோகி: அந்தப் பக்கம் பிரஸ் வெயிட் பண்றாங்க ஜி!
@kayathaisathya
யோகி: நிதி தேவைப்படுது ஜி...
மோடி: எதுக்கு... புதுசா ஏதும் கட்டடங்கள் கட்டப்போறீங்களா?
யோகி: இல்லை ஜி... போராட்டம் பண்றவங்க வீடுகளையெல்லாம் இடிக்க இன்னும் நிறைய புல்டோசர் தேவைப்படுது. வாங்கணும்!
@h_umarfarook
யோகி: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை தர்றதா சொல்லியிருக்கீங்களே... அப்படி என்ன வேலை தருவீங்க?
மோடி: வடை சுடுவது... பக்கோடா போடுவது... அவ்வளவு ஏன், புல்டோசர் ஓட்டுற வேலைகூட கொடுப்போம்!
பார்த்தசாரதி
யோகி: ஜி... நான் இந்தப் பக்கம் இருக்கேன்....
மோடி: தெரியும் ஜி. ஆனா, கேமரா அந்தப் பக்கம்தானே இருக்கு!
Sirajudeen
மோடி (மைண்ட் வாய்ஸ்): அத்வானியை நான் பின்னுக்குத் தள்ளினதைப்போல, என்னைப் பின்னால் தள்ளிடாதே குமாரு..!
பார்த்தசாரதி
யோகி: ஏன் ஜி... இவ்ளோ அவசரமா கிளம்பிட்டீங்க?
மோடி: அங்கே பாருங்க... கேமராக்களுக்கு நடுவுல ஒரு மைக்கும் தெரியுது!
Ambai Deva
யோகி: பேனர் கொஞ்சம் பெருசா அமைஞ்சுபோச்சு ஜி...
மோடி: பரவாயில்லை... எல்லாம் முடிஞ்சதும் வித்துடலாம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan