Published:Updated:

போட்டோ தாக்கு

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

`தொண்டர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். அசம்பாவிதம் நடக்கும்’னு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கீங்களே.

போட்டோ தாக்கு

`தொண்டர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். அசம்பாவிதம் நடக்கும்’னு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கீங்களே.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

ஓ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: ரெட்டைக்குழல் துப்பாக்கியை ஒற்றைக்குழல் துப்பாக்கியா மாத்தினாலும்... ட்ரிக்கரை அழுத்தப்போறது என்னவோ ‘ஜி’தானே?!

@RavindranRasu

ஓ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: ரெண்டு பேரும் இவ்வளவு பக்கத்தில் இருந்தும், சொல்லவேண்டியதை போஸ்டர்கள்லயும், பேனர்கள்லயும் சொல்லவேண்டியிருக்கு!

@NedumaranJ

இ.பி.எஸ்: `தொண்டர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். அசம்பாவிதம் நடக்கும்’னு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கீங்களே... யார் அந்தத் தொண்டர்கள்?

ஓ.பி.எஸ்: வேற யாரு... நான்தான்!

@JaNeHANUSHKA

ஓ.பி.எஸ்: ஆர்டர்லி முறையைத் தொடரக் கூடாதுன்னு சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கு..!

இ.பி.எஸ்: ஐ... ஜாலி... அப்போ இனிமே மோடி ஜி சொல்றதை நீங்களும் கேக்க வேண்டியதில்லை... நானும் கேக்க வேண்டியதில்லை!

@h_umarfarook

இ.பி.எஸ்: நகமும் சதையுமாத்தானே இருந்தோம், இப்போ ஏன் பிரச்னை பண்றீங்க?

ஓ.பி.எஸ்: உங்களைச் சதையாகவும் என்னை நகமாகவும் நினைச்சு... நான் வளர்வது பிடிக்காமல் என்னை வெட்டிவிடப் பார்க்குறீங்களே அதான்!

@PG911_twitz

ஓ.பி.எஸ்: ஒருங்கிணைப்பாளர் பதவி பெருசா... இணை ஒருங்கிணைப்பாளர் பதவி பெருசா?

இ.பி.எஸ்: ஒருங்கிணைப்பாளர் என்கிற வார்த்தையைவிட இரண்டு எழுத்து அதிகம் கொண்ட இணை ஒருங்கிணைப்பாளர் பதவிதான் பெருசுண்ணே..!

@parveenyunus

இ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: அம்மா ஜெயிலுக்குப் போனதால சி.எம் ஆனவர்தானே இவரு?

ஓ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: சின்னம்மா ஜெயிலுக்குப் போனதால சி.எம் ஆனவர்தானே இவரு?

@Vkarthik_puthur

OPS: எனக்கு ‘மிக்ஸர்’ திங்கவும் தெரியும். ‘அல்வா’ கொடுக்கவும் தெரியும்!

EPS: எனக்குக் காலைப் பிடிக்கவும் தெரியும், கால வாரிவிடவும் தெரியும்!

FACEBOOK

R Prasanna Srirangam

எடப்பாடி மைண்ட் வாய்ஸ்: ‘துணை ஒற்றைத் தலைவர்’ பதவி குடுக்கறதா சொல்லிச் சமாதானப்படுத்திப் பார்க்கலாமா இவரை..?!

மூ.மோகன்

ஓ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: எடப்பாடி தலையில் கையைவெச்சு ஆசீர்வாதம் பண்ணச் சொல்லி நம்ம ‘ஜி’கிட்ட ஒரு வார்த்தை சொல்லிவெக்கணும். இவரோட ஆட்டத்தை அடக்க எனக்கு வேற வழி தெரியலை!

Enos Ibrahim

இ.பி.எஸ்: “கண்ணைத் தொறங்க ஓபிஎஸ்... ஜெயக்குமார் போயிட்டாரு!”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan