Published:Updated:

போட்டோ தாக்கு

உதயநிதி, செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, செந்தில் பாலாஜி

`தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார்’னு அண்ணாமலை சொல்றாரே..?

போட்டோ தாக்கு

`தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார்’னு அண்ணாமலை சொல்றாரே..?

Published:Updated:
உதயநிதி, செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, செந்தில் பாலாஜி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@RavindranRasu

உதயநிதி: அந்த செங்கல்லை... அணில்களை விரட்டக் கேட்பதெல்லாம் டூ மச் அமைச்சரே!

@poonasimedhavi

செந்தில் பாலாஜி: சிலிண்டர் விலையை மீண்டும் ஏத்திட்டாங்க சின்னவரே...

உதய்: அப்போ அடுத்த தேர்தலுக்கு செங்கல்லை விட்டுட்டு சிலிண்டரைத் தூக்க வேண்டியதுதான்!

@parveen0212

செ.பா மைண்ட் வாய்ஸ்: டல்லா இருக்காரே... மகாராஷ்டிரா நியூஸை டி.வி-யில பார்த்திருப்பாரோ..?

@saravankavi

உதயநிதி: `தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார்’னு அண்ணாமலை சொல்றாரே..?

செந்தில் பாலாஜி: கட்சிதான் மாறுவேனே தவிர, கட்சியைக் கலைக்க மாட்டேன். கண்டிப்பா அது நான் இல்லை. பயப்படாதீங்க!

@LAKSHMANAN_KL

செந்தில் பாலாஜி: ‘தமிழ்நாட்டை ரெண்டாகப் பிரிக்கணும்’னு நயினார் நாகேந்திரன் சொல்றாரே தம்பி?

உதயநிதி: என்னை முதல்வரா பார்க்கணும்னு அவரும் ஆசைப்படறாரோ என்னவோ?!

@parveenyunus

செ.பா: மும்பையில் பார்த்தீங்களா... ஆட்டோ ஓட்டினவர் சி.எம் ஆகிட்டார்..!

உதய்: அதனால... ‘அணில்’ ஓட்டிய நீங்களும் சி.எம் ஆகிடுவேன்னு சொல்றீங்களா?

@balasubramni1

செ.பா: என்னை எதுக்குங்க ‘செஸ் ஒலிம்பியாட்ல’ கலந்துக்கச் சொல்றீங்க?

உதய்: ‘காய்’நகர்த்துறதுலதான் நீங்க கில்லாடி ஆச்சே... அதான்!

@LAKSHMANAN_KL

செந்தில் பாலாஜி: சபாஷ்... ‘செங்கல்லை’ வெச்சே சாதிச்சுட்டீங்களே தம்பி..!

உதயநிதி: நீங்க ‘மணலை’ வெச்சே சாதிச்சவராச்சே அண்ணே..!

FACEBOOK

Pamaran Paramaguru

“ராமருக்கு அணில் உதவியதுபோல நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன் தம்பி...”

“அணிலால பவர்கட் வராம பார்த்துக்கிட்டாலே போதும்ணே. அதுவே நீங்க எனக்குச் செய்யுற பெரிய உதவிதான்!

Ambai Deva

``சேப்பாக்கம் தொகுதியை மின்மிகை தொகுதியா மாத்தணும்ணே!’’

``அதுக்கு முதல்ல அணில்கள் இல்லாத தொகுதியா அதை மாத்தணும் தம்பி!’’

Soma Sundaram

உதயநிதி: பா.ஜ.க ஆட்சிக்கு வந்தா, முதல் ஊழல் நடவடிக்கை உங்க மீதுதான்னு அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?

பாலாஜி: ஒண்ணும் பிரச்னை இல்லை தம்பி. அப்படியொரு நிலைமை வந்தா, பேசாம பா.ஜ.க-வுல போய் சேர்ந்துருவேன்!

VKarthik

செந்தில் பாலாஜி: ‘சன்டே’ ரொம்ப வருத்தமா இருந்தீங்களே ஏன் ப்ரோ?

உதயநிதி: நம்ம கட்சியில இருக்கிற ஒரு ‘ஷிண்டேவை’ நினைச்சுத்தான்!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.