Published:Updated:

போட்டோ தாக்கு

போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

நிறைய தண்ணீர் பாட்டில் மிச்சமிருக்கு. அவர் மேல எறிஞ்சு விளையாடலாம்ல!

போட்டோ தாக்கு

நிறைய தண்ணீர் பாட்டில் மிச்சமிருக்கு. அவர் மேல எறிஞ்சு விளையாடலாம்ல!

Published:Updated:
போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@NedumaranJ

சண்முகம்: நீங்க ஓபிஎஸ்-ஸை நீக்கறீங்க... ஓபிஎஸ் உங்களை நீக்கறார்... உங்க ரெண்டு பேரையும் சசிகலா நீக்கறாங்க... நீங்க ரெண்டு பேரும் சசிகலாவை ஏற்கெனவே நீக்கிட்டீங்க... என்ன நடக்குது தலைவரே?

எடப்பாடி: இது குடும்ப விளையாட்டுய்யா... மாத்தி மாத்தி நீக்கி நீக்கி விளையாடுவோம். எங்களுக்கும் ஜாலி... மக்களுக்கும் பொழுது போகும்.

@Kirachand4

எடப்பாடி: நான் பார்த்தால் பசு... பாய்ந்தால் புலி..!

சண்முகம்: தவழ்ந்தால்?

@saravankavi

எடப்பாடி: மேடைக்கு வெளியே என்னப்பா சத்தம்..?

சண்முகம்: ரெய்டு நடந்தா மட்டும்தான் டிபன், லஞ்ச், ரோஸ் மில்க் கொடுப்பீங்களா... இங்கே ஏதும் கொடுக்க மாட்டீங்களான்னு கேட்டு உண்மைத் தொண்டர்கள் போராட்டம் பண்றாங்கண்ணே.

@parveenyunus

சண்முகம்: நீங்க பழைய பழனிசாமி இல்லைன்னு சொல்றதை எப்படி நம்புறது?

எடப்பாடி: இங்கே இவ்வளவு மேசைகள் இருந்தும் நான் தவழாம இடைக்காலப் பொதுச்செயலாளர் ஆகியிருக்கேனே...

@balasubramni1

சண்முகம்: தலைமையகத்திலிருந்து பன்னீர் ஆவணங்களையெல்லாம் எடுத்துட்டுப் போயிட்டாராம்.

எடப்பாடி: பாவம் பன்னீர் அண்ணன்... சீப்பை ஒளிச்சுவெச்சுட்டா கல்யாணம் நின்னுபோயிரும்னு நினைக்கிறார்போல.

@IamUzhavan

சி.வி.சண்முகம்: பொதுக்குழு நிகழ்வில் தக்காளி சாதம், தயிர் சாதம்னு ஏன் ரெண்டு சாதம் போடணும்... இனிமே ஏதாவது ‘ஒற்றைச் சாதம்’ மட்டும்தான்.

@absivam

எடப்பாடி: அவசரமா எங்கே கிளம்பறீங்க?

சண்முகம்: வீட்டுக்கு ரெய்டு வந்திருக்காங்களாம். சாப்பாட்டுக்கு ஆர்டர் குடுத்துட்டு வந்துடுறேன்.

@parveenyunus

சண்முகம்: நம்ம ஆளுங்க மண்டையை உடைச்சுருக்கார் ஓபிஎஸ்.

இ.பி.எஸ்: கட்சியையே உடைச்சுட்டார்... இதுல மண்டையாம் மண்டை.

@RahimGazzali

சி.வி.சண்முகம்: ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒரு போன் போட்டு இங்கே கூப்பிடுங்க.

எடப்பாடி: எதுக்கு?

சிவி.சண்முகம்: நிறைய தண்ணீர் பாட்டில் மிச்சமிருக்கு. அவர் மேல எறிஞ்சு விளையாடலாம்ல!

@pbukrish

சி.வி.சண்முகம்: அண்ணே... நீங்க இவ்வளவு லேட் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுருந்தா, நான் ஓபிஎஸ் பக்கமே போயிருப்பேன். சீக்கிரம் முடிங்கண்ணே... மணி 12 ஆகப்போகுதா இல்லையா!

FACEBOOK

M Peter Francisca

சண்முகம்: எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்... கட்சி இப்போ யார்கிட்ட இருக்கு?

இ.பி.எஸ்: அது வழக்கம்போல டெல்லி ஓனர்கிட்டதான் இருக்கு!

Enos Ibrahim

சண்முகம்: நான் மட்டும் இந்நேரம் கட்சி ஆபீஸில் இருந்திருந்தா...

எடப்பாடி: இருந்திருந்தா... மண்டை ஒடைஞ்சு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருப்பீங்க!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.