Published:Updated:

போட்டோ தாக்கு

அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர்

உங்களை மாதிரி ஒரே நேரத்தில் என்னால ரெண்டையும் செய்ய முடியாதுங்க.

போட்டோ தாக்கு

உங்களை மாதிரி ஒரே நேரத்தில் என்னால ரெண்டையும் செய்ய முடியாதுங்க.

Published:Updated:
அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர்
அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர்

TWITTER

@Vkarthik_puthur

அமித் ஷா: தம்பி... நீங்க மட்டும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தீங்கன்னா... நல்லா வரி செலுத்துறீங்கன்னு உங்களுக்கு விருது கொடுப்போம்.

ஜூனியர் என்.டி.ஆர்: இல்லாட்டி?

அமித் ஷா: வரி ஏய்ப்பு வழக்கு தொடுத்து டார்ச்சர் கொடுப்போம்.

@IamJeevagan

ஜூ.என்.டி.ஆர்: வணக்கம் ஜி... அடுத்து ‘பாளையத்து அம்மன்’ படத்தை ரீமேக் பண்ணி நடிக்கிறேன். அதுல, ஜன்டா கேரக்டர்ல நீங்கதான் நடிக்கணும்.

அமித் ஷா: தாராளமா நடிக்கிறேன் தம்பி... Fanta கலர்ல துண்டைக் கொடுத்தீங்கன்னா போதும். ஜன்டா என்ன, முண்டா பனியன் போட்டுட்டுக்கூட நடிக்கிறேன்.

@RavindranRasu

அமித் ஷா: ‘நாட்டுக் கூத்து’ பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு.

ஜூ.என்.டி.ஆர்: ஆனா, நீங்க நாட்டுல நடத்துற கூத்துகள் நல்லா இல்லையே.

@mohanramko

ஜூ.என்.டி.ஆர்: சார்... என்னோட அடுத்த படத்தை நீங்கதான் இயக்கிக் கொடுக்கணும்.

அமித் ஷா: தம்பி... நான் சந்தான பாரதி இல்லைப்பா... அமித் ஷா!

@RavindranRasu

அமித் ஷா: அரசியலுக்கு வந்துட்டுகூட நடிக்கலாமே?

ஜூ.என்.டி.ஆர்: உங்களை மாதிரி ஒரே நேரத்தில் என்னால ரெண்டையும் செய்ய முடியாதுங்க.

@San8416

அமித் ஷா: பா.ஜ.க-வில் சேர்ந்ததற்கு நன்றி.

ஜூ.என்.டி.ஆர்: நான் அப்படி எதுவுமே சொல்லலையே?

அமித் ஷா: அட என்ன தம்பி நீங்க... கண்ணால பார்த்தாலே சேர்த்துடுவோம். கையவே குடுத்திட்டீங்க. விட்டுருவோமா?

@h_umarfarook

அமித் ஷா: தம்பி... ஆட்காட்டி விரலைப் பிடிச்சா அவார்டு... மோதிர விரலைப் பிடிச்சா ரெய்டு... எது வேணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

@RamAathiNarayen

ஜூ.என்.டி.ஆர்: ‘RRR’ படத்துல நடிச்சதுக்குப் பாராட்ட இப்போதான் உங்களுக்கு நேரம் கிடைச்சுதா ஜி?

அமித் ஷா: ஹிஹி... இப்பதானே தெலங்கானாவுல தேர்தல் வரப்போகுது.

@chennappan10

ஜு.என்.டி.ஆர்: நியாயமா ஜி... கையைக் கொடுத்ததுக்கெல்லாம் ஜி.எஸ்.டி-யா?

அமித் ஷா: தாடியை ஷேவ் பண்ணாம வந்ததுக்கும்..!

@amuduarattai

அமித் ஷா: உங்க `ஆர்.எஸ்.எஸ்’ படம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு பையா.

ஜூ.என்.டி.ஆர்: ஐயய்யோ... அது `ஆர்.எஸ்.எஸ்’ இல்லை... `ஆர்.ஆர்.ஆர்.’

@Kirachand4

ஜூ.என்.டி.ஆர்: `RRR’ மாதிரி, உங்களைவெச்சு `AAA’-ங்கற டைட்டில்ல ஒரு படம் எடுக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க நடிக்கிறீங்களா?

அமித் ஷா: `AAA’-ன்னா?

ஜூ.என்.டி.ஆர்: அமித் ஷா... அம்பானி... அதானி..!

@LAKSHMANAN_KL

அமித் ஷா: பேசாம நம்ம கட்சியில சேர்ந்துடுங்க... ‘என்.டி.ஆர்’ மூன்றெழுத்து... ‘பி.ஜே.பி’ மூன்றெழுத்து... ‘வெற்றி’ மூன்றெழுத்து...

ஜூ.என்.டி.ஆர் (மைண்ட் வாய்ஸ்): ம்க்கும்... எல்லாம் என் தலையெழுத்து!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan