Published:Updated:

போட்டோ தாக்கு

அன்பில் மகேஷ் -  ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

நீங்க என்னதான் விதவிதமான கெட்டப் போட்டாலும், இந்த விஷயத்துல நம்ம பிரதமரை யாராலயும் ஜெயிக்க முடியாது.

போட்டோ தாக்கு

நீங்க என்னதான் விதவிதமான கெட்டப் போட்டாலும், இந்த விஷயத்துல நம்ம பிரதமரை யாராலயும் ஜெயிக்க முடியாது.

Published:Updated:
அன்பில் மகேஷ் -  ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@saravankavi

ஸ்டாலின்: இன்னைலருந்து அறிக்கைவிடுறது உடனே அதை வாபஸ் வாங்குறதுக்குன்னு ஒரு துறையை உருவாக்கி, அதுக்கு உங்களை அமைச்சரா புரொமோட் பண்றேன்.

@RamAathiNarayen

ஸ்டாலின்: எனக்கு சல்யூட் அடிக்கிறது இருக்கட்டும்... பள்ளிக்கூடங்களைப் போய் ஒழுங்கா கவனிச்சு, உங்களுக்கு மத்தவங்க சல்யூட் அடிக்கிற மாதிரி நடந்துக்குங்க... கிளம்புங்க!

@saravankavi

ஸ்டாலின்: நீங்க என்னதான் விதவிதமான கெட்டப் போட்டாலும், இந்த விஷயத்துல நம்ம பிரதமரை யாராலயும் ஜெயிக்க முடியாது.

@Vkarthik_puthur

அன்பில் மகேஷ்: ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் சின்னவரை அமைச்சராக்கி, அவருக்கு ஒரு பொறுப்பைக் கொடுங்க முதல்வரே..!

ஸ்டாலின்: அவருக்கு ‘பொறுப்பை’ கொடுக்கப்போய், என்மீது மக்களிடம் ‘வெறுப்பை’ உண்டாக்கி, ‘வம்பில்’ மாட்டிவிடவா ‘அன்பில்’ மகேஷ்..?!

@LAKSHMANAN_KL

அன்பில் மகேஷ்: தி.மு.க ஆட்சியில் நான்கு முதல்வர்கள் இருக்கிறார்கள் என்று

இ.பி.எஸ் கலாய்க்கிறார் தலைவரே.

ஸ்டாலின்: விடுங்க தம்பி... அவரோட ஆட்சியில இருந்ததைவிட ஒரு மடங்கு அதிகம்கிற வயித்தெரிச்சல்ல பேசுறாரு!

@amuduarattai

ஸ்டாலின்: பள்ளிக் குழந்தைகளுக்குப் பரவும் ஃப்ளூ காய்ச்சலைக் கட்டுப்படுத்த, இப்படி புளூ சட்டை போட்டால் போதும்னு அறிக்கை விட்டிருக்கீங்கலாமே?

மகேஷ்: ஆமா தலைவரே... அதை இப்பவே வாபஸ் வாங்கிடுறேன்.

@LAKSHMANAN_KL

ஸ்டாலின்: என்ன தம்பி... திடீர்னு புளூ கலர் டிரெஸ்ல வந்திருக்கீங்க?

அன்பில் மகேஷ்: ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிற சொட்டு நீலம் விளம்பரப் படத்துல முதன்முறையா நடிக்கப்போறேன். அதான், உங்ககிட்ட ஆசி வாங்கிட்டுப் போக வந்தேன் அங்கிள்!

@LAKSHMANAN_KL

ஸ்டாலின்: என்ன கெட்டப் தம்பி இது?

அன்பில் மகேஷ்: ‘சேப்பாக்கம்

சே குவேரா’வுக்குப் பாதுகாப்பு கொடுக்க, நான் போட்டுருக்குற ‘செக்யூரிட்டி சேகர்’ கெட்டப் தலைவரே..!

FACEBOOK

செல்வகண்ணன்

ஸ்டாலின்: யாருய்யா நீ... இவ்வளவு நாளா எங்கே இருந்த... மிஸ்டர் அன்பில் துரைசிங்கம்... இன்னையிலருந்து உங்களை பேங்க் ஏ.டி.எம் செக்யூரிட்டியா புரொமோட் பண்றேன்!

Ashokan Ahan

ஸ்டாலின் (மைண்ட்வாய்ஸ்): பண்ணவேண்டிய வேலையைத் தவிர மீதி எல்லாத்தையும் சரியா பண்றாரே!

Kstalin Kannan

``எல்லா அறிவிப்புகளையும் அறிவித்துவிட்டு திரும்பப் பெறுவதால், அபவ்-டர்ன் மட்டும் நான் சொல்ல மாட்டேன்!’’

முகம்மது தௌபீக்

ஸ்டாலின்: மகேஷ்... ‘பேண்டு வாத்தியார்’ உடையில சும்மா கும்முன்னு இருக்குறீங்க!

அன்பில்: (கிழிஞ்சுது) தலைவரே இது சாரணர் உடை!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan