அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

போட்டோ தாக்கு

மதுவந்தி, அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
மதுவந்தி, அண்ணாமலை

ஸ்டாலினைத் தூங்கவிடாம பண்ணணும்னுதான் என்னைத் தலைவரா போட்டாங்க... அந்த விஷயத்துல தி.மு.க அமைச்சர்கள் என்னை டம்மி ஆக்கிட்டாங்க.

TWITTER

@h_umarfarook

மதுவந்தி: நீங்க அமெரிக்கா கொண்டுபோன 5,000 கோடியை இங்கிருக்கிற 500 கோடி தமிழர்களுக்கும் பிரிச்சுக் கொடுத்திருந்தா... ஒவ்வொருத்தருக்கும் 10 லட்சம் கிடைச்சிருக்கும். அடுத்த தேர்தல்ல தமிழகத்திலுள்ள 333 தொகுதிகள்லயும் நாம ஈஸியா ஜெயிச்சிருக்கலாம்!

அண்ணாமலை: ஐயய்யோ... இப்பவே கண்ணைக் கட்டுதே!

@LAKSHMANAN_KL

அண்ணாமலை: என்ன சொல்றீங்க மதுவந்தி ஜி... பிறந்த அஞ்சே நாளில் ‘பொன்னியின் செல்வன்’ எல்லா பாகங்களையும் படிச்சு முடிச்சுட்டீங்களா?

மதுவந்தி: ஆமா ஜி... அதனால்தான் வந்தியத்தேவன் நினைவா, எனக்கு மது‘வந்தி’னு பேரு வெச்சாங்க.

@Sivakum31085735

அண்ணாமலை: நான் இருபதாயிரம் புக் படிச்சிருக்கேன்!

மதுவந்தி: இதென்ன பிரமாதம்... நான் ஆத்திச்சூடியில ‘திருக்குறளே’ படிச்சிருக்கேன்.

@ParveenF7

மதுவந்தி: ஏன் அண்ணா... டல்லா இருக்கீங்க?

அண்ணாமலை: ஸ்டாலினைத் தூங்கவிடாம பண்ணணும்னுதான் என்னைத் தலைவரா போட்டாங்க... அந்த விஷயத்துல தி.மு.க அமைச்சர்கள் என்னை டம்மி ஆக்கிட்டாங்க.

@senthalaivinoth

``நீ யார்னு எனக்குத் தெரியும்... நான் யார்னு உனக்குத் தெரியும்... நாம ரெண்டு பேரும் யார்னு இந்த ஊருக்கே தெரியும்!’’

@DevAnandR155

மதுவந்தி: இப்ப என்ன பெருசா கேட்டுட்டேன்னு இவ்வளவு பெரிய கும்பிடு போடுறீங்க... பிரதமர் நிகழ்ச்சியில என் நாட்டிய நிகழ்ச்சி வெச்சுக்கலாமான்னுதானே கேட்டேன்?!

@saravankavi

மதுவந்தி: ஊர்ல எத்தனையோ கட்சிகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு பா.ஜ.க-வுலதான் சேரணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு?

அண்ணாமலை: நான் படிச்ச 20,000 புத்தகங்களின் அறிவும்... நான் கண்டுபிடிச்ச வாட்டர் போட்டும் இங்கேதான் சரியான முறையில் பயன்படும்னு உள்மனசு சொல்லிச்சு.

@kayathaisathya

அண்ணாமலை: நாளைக்குத்தானே என்னைச் சந்திக்க வர்றதா சொன்னீங்க... இன்னைக்கே வந்துட்டீங்க?

மதுவந்தி: புல்புல் பறவையில வந்தேன்... அதான் சீக்கிரமா வந்துட்டேன்!

FACEBOOK

Mannargudi Rajagopal

அண்ணாமலை: அக்கா, அந்த ‘எட்டாயிரம் கோடி மக்கள்’ என்ன கணக்கு?

மதுவந்தி: அதுவா... அந்த ‘இருபதாயிரம் புத்தகம்’ மாதிரிதான் தம்பி.

Ravikumar Krishnasamy

மதுவந்தி: அண்ணாமலை ஜி... நிர்மலாம்மா சொல்றது உண்மைதான். நான் திருப்பதி போனப்ப, பணம் கொடுத்து வெங்கடாசலபதி டாலர் வாங்கினேன். ஆனா, டாலர் கொடுத்து, பணத்தை வாங்க முடியலை.

Ambai Deva

மதுவந்தி: கட்சி நிகழ்ச்சிகளில் எனக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு தரணும் தலைவரே..!

அண்ணாமலை: கட்சி ஆடுற டான்ஸ் போதாதுன்னு நீங்க வேற தனியா ஆடணுமா?

பார்த்தசாரதி

அண்ணாமலை: லோன் கட்டலேன்னு ஜப்திக்கு வந்தாங்களே, என்னாச்சு மேடம்?

மதுவந்தி: என் ஸ்டைல்ல கணக்கைச் சொன்னேன்... தெறிச்சு ஓடிட்டாங்க.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.