அரசியல்
அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பி.எஸ்

‘பிரியமுள்ள தம்பி எடப்பாடியாருக்கு... அ.தி.மு.க ஆபீஸ் சாவியைப் புறாவின் காலில் கட்டித் திருப்பி அனுப்பவும்!’

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@RahimGazzali

“இந்தப் புறாவை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்புவோம்... அவர் புறாவைப் பிடித்தால் சமாதானம். சமைத்தால் சண்டை!”

@saravankavi

ஓ.பி.எஸ்: அ.தி.மு.க-வில் சட்டவிதிகளை மாற்றுவது மிகவும் அபாயகரமானதுன்னு சொல்வேன். ஆனா, அந்த அபாயம் எனக்குத்தான்னு சொல்ல மாட்டேன்.

@amuduarattai

ஓ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை இந்தப் புறாவைப்போலப் பறக்கவிட வேண்டும். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையைக் கூண்டுக்குள்ளிருக்கும் புறாவைப்போல பத்திரமாக மூடிவைக்க வேண்டும்.

@LAKSHMANAN_KL

ஓ.பி.எஸ்: தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களில், எந்த ஆலயத்தின்மீது இந்தப் புறா பறந்து போய் உட்காருகிறதோ... அதைப் பொறுத்துத்தான் என் அரசியல் பயணம் அமையும்.

தொண்டர்: அறிவாலயமும் கமலாலயமும் அந்த ஆலயங்களில் அடங்கும்தானே தலைவரே?!

@parveenyunus

ஒரு தொண்டர்: தலைவருக்குப் புறா எங்கிருந்து கிடைச்சுது?

மற்றொருவர்: அன்றைக்குத் தலைமை அலுவலகத்துலருந்து நிறைய பொருள்களைத் தூக்கிட்டு வந்தோமே... அதுல இந்தப் புறாக்கூண்டும் அடக்கம்.

@Kirachand4

“நானும் இ.பி.எஸ்-ஸும் ‘ஜோடி’ப்புறாவா இருந்தோம். இ.பி.எஸ் புறா என்னைவிட்டு ‘ஓடி’ப்போச்சு. இப்ப எனக்கு ஒரே துணை ‘மோடி’ப் புறாதான். அவரை ‘நாடி’த்தான் இந்த ‘போடி’ப்புறா டெல்லிக்குப் போய்க்கிட்டிருக்கு.”

@urs_venbaa

‘பிரியமுள்ள தம்பி எடப்பாடியாருக்கு... அ.தி.மு.க ஆபீஸ் சாவியைப் புறாவின் காலில் கட்டித் திருப்பி அனுப்பவும்!’

@LAKSHMANAN_KL

“இது ஜோடிப் புறாவா தலைவரே?”

“ம்ஹூம்... ‘மோடி’ப்புறா. இது சுத்தாத உலக நாடுகளே இல்லை.”

@Vkarthik_puthur

“தொண்டர்கள் மைண்ட் வாய்ஸ்: பரவால்லியே... நம்ம தலைவருக்கு ‘காக்கா’ புடிக்க மட்டும்தான் தெரியும்னு நெனைச்சோம்... ‘புறாவையும்’ நல்லா புடிக்கிறாரே!”

@poonasimedhavi

“என்னங்க இது... மேலே பறக்கவிட்டா... மறுபடி மறுபடி இந்தப் புறா காலடியில வந்து விழுகுது?”

“அட... அது அ.தி.மு.க புறாவாச்சே!”

FACEBOOK

Ravikumar Krishnasamy

ஓ.பி.எஸ்: மக்களே... நான் இப்போது இந்தச் சனாதனப்புறாவை...

தொண்டர்: ஐயோ... தலைவரே... அது சமாதானப்புறா..!

Balamurugan

தொண்டர்: தலைவரே... புறாகிட்ட அட்ரஸைச் சரியாச் சொல்லிடுங்க. அதுபாட்டுக்கு கோபாலபுரத்துக்குப் போயிடப்போகுது!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan