அரசியல்
அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

எதிரணிக்குச் சொல்லிக் கொள்கிறேன்... ‘ஒத்து’ வரலே... ‘குத்து’தான்!

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@parveenyunus

ஜெயக்குமார்: எதிரணிக்குச் சொல்லிக் கொள்கிறேன்... ‘ஒத்து’ வரலே... ‘குத்து’தான்!

@LAKSHMANAN_KL

``இந்தியாவிலுள்ள எல்லாப் பாலங்களின் உறுதித் தன்மையையும் நான்தான் செக் பண்ணணும்னு ஜி சொல்லிட்டாரு... அதான் டிரெயினிங்ல இறங்கிட்டேன்.’’

@DevAnandR155

``இந்த கலரைப் பார்த்தா ‘ஓசி பஸ்’ ஞாபகம் வருது... இந்தா வாங்கிக்க ஒரு பன்ச்!’’

@Elanthenral

``கண்ணுக்கெட்டின தூரம் வரை எதிரிகளே இல்லை... அதனாலதான் இதைப் போட்டுக் குத்திக்கிட்டிருக்கேன்.’’

@saravankavi

``தேர்தல்ல தோத்திருக்கலாம். ஆனா, அந்த சார்பட்டா பரம்பரையாலயே இன்னைக்கு வரைக்கும் வீழ்த்த முடியாத சாம்பியன் யாருன்னா... அது நான்தான். டான்ஸிங் மைக்!’’

@DevAnandR155

`` ‘மைக்’ மோகனும் நானே... ‘மைக்’ டைசனும் நானே!’’

@poonasimedhavi

``எதற்கும் நல்லா பிராக்டிஸ் பண்ணிவெப்போம்... பின்னாடி நம்ம அணிக்குள்ளேயே மோதவேண்டி வந்தாலும் வரும்.’’

@Paa_Sakthivel

``ஓ.பி.எஸ் அணியில யாராவது தைரியமான ஆள் இருந்தா... ஒத்தைக்கு ஒத்தை என்கூட சண்டைபோட மெயின்ரோடு பக்கமா வாங்க பார்க்கலாம்.’’

@h_umarfarook

“நல்லவேளை காவி கலர்ல இல்லை.. இருந்திருந்தா, குத்திட்டு சாரி வேற சொல்லணும்!”

FACEBOOK

Jiya Sen

``இந்தப் பயிற்சி முடிஞ்சதும், அடுத்து தண்ணி பாட்டிலை வீசி வேற பயிற்சி எடுக்கணும்.’’

VKarthik

ஜெயக்குமார் மைண்ட் வாய்ஸ்: என்னுடைய பலத்தை நிரூபிக்க... எனக்கு வேற வழி தெரியலை ஆத்தா!

Hemanth K Govindh

``இந்த ‘பன்ச்’சும்... பில்டப்பும்... OPS-ஐ மறக்கத்தான்...

எம்.எல்.ஏ பதவி இல்லாததை மறக்கத்தான்... பயத்தை மறைக்கத்தான்..!’’

(`பொன்னியின் செல்வன்’ விக்ரம் மாடுலேஷனில் வாசிக்கவும்).

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.