அலசல்
சமூகம்
Published:Updated:

போட்டோ தாக்கு

ஸ்டாலின், கமல், துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின், கமல், துரைமுருகன்

பழைய துண்டுச்சீட்டுகள் நிறைய வெச்சுருக்காரு. அதை வேணா கொடுப்பாரு.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

ஸ்டாலின், கமல், துரைமுருகன்
ஸ்டாலின், கமல், துரைமுருகன்

TWITTER

@parveenyunus

கமல்: அமைச்சர்கள் குண்டக்க மண்டக்க பேசறதுதானே உங்க பிரச்னை... அவங்களை என்கிட்ட ட்ரெயினிங் அனுப்புங்க. புரியாமப் பேசுறது எப்படின்னு சொல்லிக்கொடுத்து அனுப்புறேன்.

@absivam

ஸ்டாலின்: கட்சி எப்படி இருக்கு கமல்?

துரைமுருகன்: எப்படி இருக்குனு இல்லை... அது எங்கே இருக்குனு கேளுங்க. சரியா இருக்கும்.”

@h_umarfarook

ஸ்டாலின்: என் கட்சியில சில அமைச்சர்களை மட்டும் ரெண்டு வருஷத்துக்கு `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள போட்டுப் பூட்டணும். வாய்ப்பிருக்கா... அதுக்கான செலவைக்கூடத் தந்துடுறேன்.”

@h_umarfarook

ஸ்டாலின்: இப்படி ஒரு டிரெஸ் போட்ட அரசியல்வாதியை நான் இதுவரை பார்த்ததே இல்லை.”

கமல்: உண்மைதான். இது கெட்டப் மன்னன் மோடியே போடாத டிரெஸ்!”

@RavindranRasu

ஸ்டாலின்: உங்களுக்கு மட்டும் எப்படி ராத்திரியில நல்லாத் தூக்கம் வருது?

கமல்ஹாசன்: மேடையில் ஏறிப் பேசுற அளவுக்கு என் கட்சியில ஆட்கள் இல்லை... அதான்.

@LAKSHMANAN_KL

ஸ்டாலின்: ‘நமக்கு நாமே’னு சொல்லி கட்சியைப் பலப்படுத்துங்க கமல்..!

கமல்ஹாசன்: அட நீங்க வேற... எப்படிச் சொல்லி பலப்படுத்தினாலும்... தேர்தல்ல ‘நமக்கு நாமமே’தான் கிடைக்குது.

@poonasimedhavi

கமல்: சினிமா எனக்குத் தொழில்... அரசியல் எனது கடமை.

துரைமுருகன்: இதையெல்லாம் கேட்டு ஜாலியா என்ஜாய் பண்றது எங்க பொழுதுபோக்கு.

@ParveenF7

கமல்: கூட்டணி வெச்சுக்குவோம்... எத்தனை சீட் கொடுப்பீங்க?

துரைமுருகன் (மைண்ட் வாய்ஸ்): பழைய துண்டுச்சீட்டுகள் நிறைய வெச்சுருக்காரு. அதை வேணா கொடுப்பாரு.

@manickamk

ஸ்டாலின்: பதவி கேட்டுத் தொல்லை கொடுக்கும் தொண்டர்களைச் சமாளிக்க ஒரு ஐடியா கொடுங்க கமல்!

கமல்: என்னோட ஏதாவதொரு ட்வீட்டைப் பிழையில்லாம படிச்சு, பொருளோட ஒப்புவிக்கணும்னு ஒரு கண்டிஷன் போடுங்க. தெறிச்சு ஓடுவாங்க!

FACEBOOK

எம்.கல்லூரி ராமன் மாலு

ஸ்டாலின்: உதயநிதியோட போட்டி போட்டு நடிக்க முடியலேன்னு கமல் சொல்றது உண்மையாண்ணே?

துரைமுருகன்: உண்மைதான் தம்பி. கமல் சினிமாவில் சொல்லலை... அரசியலில் சொல்றாரு!

M Peter Francisca

கமல்: நானும் ஒருநாள் முதல்வர் ஆவேன்.

துரை: ஆமாமா. ஏற்கெனவே அர்ஜுன் ஆகிட்டார். நீங்க அடுத்த படத்துலயாவது ஆகிடுங்க!

Bhuvaneswaran Rb

துரைமுருகன் (மைண்ட் வாய்ஸ்): தலைவர், ஏற்கெனவே தூக்கம் வராம கஷ்டப்படுறாரு... இதுல உங்க பேச்சை வேற கேட்டா... சுத்தம்!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.