Published:Updated:

போட்டோ தாக்கு

இந்தப் பக்கம் பார்த்தா வேலூர்... அந்தப் பக்கம் பார்த்தா கோவை... கிட்ட பார்த்தா புழல்... எட்டிப்பார்த்தா திகார்

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

Twitter

@OruvanOTN

“நான் சுத்திவளைச்சுப் பேச விரும்பலை... எதிர்க்கட்சிக்காரனைப் பார்த்துக் கேட்கிறேன்... என்னய்யா பண்ணினான் என் கட்சிக்காரன்..? ஏதோ ஓட்டுக்காக இட ஒதுக்கீடு கொடுக்குறோம்னு ஒரு பொய்யைக் கிளப்பிவிட்டோம்... அதை இப்ப ரத்து பண்ணிட்டாங்க. இது ஒரு குத்தமா?”

@chennappan10

இ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): கையில் இவ்வளவு கயிறு கட்டியும் ‘சின்னம்மா பயம்’ மட்டும் இன்னும் போகவே மாட்டேங்குதே..!

@gv_rajen

“வன்னியருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்த உயர் நீதிமன்றம், நமது தோழர் ஓ.பி.எஸ் அவர்களின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள மதுரையில் அமைந்திருக்

கிறது என்று இந்த உலகத்துக்குத் தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்!”

@KmFarook6

“திரைமறைவில் ஓ.பி.எஸ்-சசிகலா செய்யும் சதித் திட்டங்களால்,

அ.தி.மு.க-வை யாராலும் அசைக்க முடியாது என்பதை நடுங்கியபடியே தெரிவித்துக் கொள்கிறேன்...”

@gv_rajen

“மதுரை அளிக்கும் தீர்ப்பு, ஆதி காலத்திலிருந்தே தவறாகத்தான் இருக்கும் என்பதை ஷேக்ஸ்பியர் எழுதிய சிலப்பதிகாரத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்!”

@amuduarattai

“தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து வெளிப்படையாகவே கேட்கிறேன்... நீங்கள் அரசியல் நடத்துறீங்களா, இல்லை ரெய்டு மட்டுமே நடத்துறீங்களா? மனுஷன் தூங்க முடியுதா?”

Facebook

மூ.மோகன்

“அதிரடி ரெய்டுகள் மூலம் அ.தி.மு.க-வை அழித்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள்... அந்த வேலையை நாங்களே கச்சிதமாக முடித்துவிடுவோம் என்பதைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!”

Vaira Bala

“இந்தப் பக்கம் பார்த்தா வேலூர்... அந்தப் பக்கம் பார்த்தா கோவை... கிட்ட பார்த்தா புழல்... எட்டிப்பார்த்தா திகார்... ஒரு மனுஷன் எப்படிய்யா தூங்குவான்?!”

Raja Gopal

“வெளிநாட்டையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ‘கொடநாட்டை’ டிரெண்ட் ஆக்கியது நான்தான் என்பதை மக்கள் மறக்க வேண்டாம்..!

Ambai Deva

“நான் இப்படி இருக்கப்போய்த்தான் முதல்வராக ஸ்டாலினைத் தேர்வுசெய்தார்கள் மக்கள். அந்த நன்றியை ஸ்டாலின் நினைத்துப் பார்க்க வேண்டும். உடனடியாகப் பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென்று...”

Ambai Deva

``என்னப்பா சொல்றீங்க... அந்தப் பக்கம் ரெய்டா? அங்கே என் வீடு இல்ல இருக்கு!’’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு