Published:Updated:

``இருக்கற இடம் தெரியாம அமைதியா இருப்போம்...” - ஆறுக்குட்டி கட்சி மாறிய பின்னணி

ஆறுக்குட்டி

சசிகலா கை ஓங்கினால், தனக்கு ரீ-என்ட்ரி கிடைக்கும் என ஆறுக்குட்டி எதிர்பார்த்தார். ஒருகட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் அவரிடம் பேசியுள்ளனர். ஆனால்...

``இருக்கற இடம் தெரியாம அமைதியா இருப்போம்...” - ஆறுக்குட்டி கட்சி மாறிய பின்னணி

சசிகலா கை ஓங்கினால், தனக்கு ரீ-என்ட்ரி கிடைக்கும் என ஆறுக்குட்டி எதிர்பார்த்தார். ஒருகட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் அவரிடம் பேசியுள்ளனர். ஆனால்...

Published:Updated:
ஆறுக்குட்டி

அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்திருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக-வில் அதிக முறை (3) விசாரிக்கப்பட்டது அவரிடம்தான். கொடநாடு வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும்,

ஆறுக்குட்டி
ஆறுக்குட்டி

அதிமுக-வின் விவிஐபி-களுக்கு அதிலுள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தவும்தான் ஆறுக்குட்டி திமுக-வில் இணைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் திமுக-வில் இணைந்ததற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து ஆறுக்குட்டிக்கு நெருங்கிய அதிமுக பிரமுகர்கள் சிலர் கூறுகையில், ``சட்டசபைத் தேர்தலில் தனக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். சீட் கிடைக்காததால் அப்போதே அதிருப்தியானார். தொடர்ந்து மாவட்டத்திலுள்ள வேலுமணியோ, மற்ற நிர்வாகிகளோ அவரைக் கண்டுகொள்ளாமல் ஓரங்கட்டத் தொடங்கினார்கள்.

ஆறுக்குட்டி
ஆறுக்குட்டி

ஒரு கட்டத்தில் அவரின் சொந்தப் பகுதி தொண்டர்கள்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கினார்கள். இதனால் ஆறுக்குட்டி நொந்துபோனார். அதனால்தான் லைம்லைட்டில் இருப்பதுபோல, அவ்வப்போது பிரஸ் மீட் நடத்திவந்தார்.

தான் இருக்கும் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினரைத் தங்கள் கட்சியில் இழுப்பது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஸ்டைல். அந்த வகையில் அவர் கோவை வந்தது முதலே, அதிமுக-வில் ஏராளமான நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து வந்தார். அந்த வகையில் ஆறுக்குட்டிக்கும் அழைப்பு விடுத்தார். பாஜக-விலும் தூண்டில் போட்டுள்ளனர்.

ஓபிஎஸ்-சசிகலா
ஓபிஎஸ்-சசிகலா

அதேநேரத்தில் அதிமுக-வில் பிரச்னைகள் தீர்ந்து சசிகலா கை ஓங்கினால், தனக்கு ரீ-என்ட்ரி கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஆறுக்குட்டி. ஒருகட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் அவரிடம் பேசியுள்ளனர். ஆனால் சமீபகால நிகழ்வுகளால் அதிமுக-வை நம்பி இனிப் பயனில்லை எனப் புரிந்துகொண்டார்.

அதிமுக-வில் இருந்தபோது மகளுக்கு மாவட்ட கவுன்சிலர் பதவி, மகனுக்குக் கட்சி பதவி என்று குடும்பத்தையே அதிகார மையமாக மாற்றினார். இதற்கிடையே, ஆறுக்குட்டியை நேரில் பார்த்த செந்தில் பாலாஜி வாரிசுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். அதனால்தான் திமுக-வில் இணையும் முடிவை எடுத்திருக்கிறார்.

மகளுடன் ஆறுக்குட்டி
மகளுடன் ஆறுக்குட்டி

மேலும், லூஸ் டாக் விட்டு சர்ச்சையாகி ,அதனால் வாரிசுகளுக்கு பாதிப்பு ஆகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். அதன் காரணமாகத்தான், பொள்ளாச்சியில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தான் பேசுவதைத் தவிர்த்து மகள் அபிநயாவைப் பேசவைத்தார்.

இருப்பினும் ஆறுக்குட்டியை நன்கு அறிந்த அதிமுக தொண்டர்கள் செல்போனில் அழைத்து, வாயை கிளறிக்கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இது போன்ற சர்ச்சைகளை செந்தில் பாலாஜி விரும்ப மாட்டார் என்பதால், செல்போன், மீடியா என்று அனைவரிடமிருந்தும் ஒதுங்கி அமைதியாக இருக்க முடிவு செய்திருக்கிறார்” என்றனர்.