Published:Updated:

பெரியகுளம் வீட்டுக்குச் செல்லாத ஓ.பி.எஸ்! -போடி வாடகை வீட்டில் தங்குவது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓ.பி.எஸ் தங்கியுள்ள வாடகை வீடு
ஓ.பி.எஸ் தங்கியுள்ள வாடகை வீடு

பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லாத ஓ.பி.எஸ்., வாடகை வீடு எடுத்து தனது தொகுதியான போடியில் தங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் கடந்த 24-ம் தேதி மாலை 6 மணி முதல் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், கம்பம், தேனி, போடி, கூடலூர் ஆகிய ஐந்து நகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக, கடந்த 21-ம் தேதி முதல் பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் ஊரடங்கு செயல்பாட்டில் உள்ளது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இப்படி, மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு வந்தார்.

`டயட் கன்ட்ரோல், அசைவத்துக்கு குட்பை..!' - மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு என்ன செய்கிறார் ஓ.பி.எஸ்?

தனது வீடு பெரியகுளத்தில் இருப்பதாலும், பெரியகுளம், முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாலும், நேராக, தனது தொகுதியான போடிக்குச் சென்ற அவர், தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் அருகில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்கினார். ஏன் பெரியகுளம் செல்லாமல் வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும் என அவரது சகாக்கள் சிலரிடம் கேட்டோம்.

ஓ.பி.எஸ் தங்கியுள்ள வாடகை வீடு
ஓ.பி.எஸ் தங்கியுள்ள வாடகை வீடு

``எப்போதும் அவர் பெரியகுளம் வீட்டில்தான் தங்குவார். அப்படி இல்லையென்றால், போடியில் உள்ள தனது அலுவலக மாடியில் தங்குவார். பெரியகுளத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், நேராக போடி வந்துவிட்டார். ஆனால், போடி அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதால் அங்கே தங்க முடியவில்லை. உடனே, அலுவலகம் அருகே இருக்கும் வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியுள்ளார்.

குடும்பத்தோடு போடியில் ஓ.பி.எஸ் தங்கியுள்ளார் எனச் சிலர் கூறிவருகிறார்கள். அப்படி ஏதும் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரியகுளத்தில்தான் உள்ளனர். மேலும், இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்” என்றனர்.

கொரோனா பரவல்: அடுத்தடுத்து மூடப்படும் தேனி காவல்நிலையங்கள், அரசு அலுவலகங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு