Published:Updated:

`கார்டனில் ரஜினி நடத்திய பீமரத சாந்தி யாகம்!'- வளர்பிறை நாளைத் தேர்வு செய்த பின்னணி

மனதில் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறவும் எதிர்க்க நினைப்பவர்களை வலுவிழக்கச் செய்வதும் இந்த யாகத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள்.

ரஜினி வீட்டில் யாகம்.
ரஜினி வீட்டில் யாகம்.

சென்னை, போயஸ் கார்டனில் நேற்றிரவு யாகம் ஒன்றை ரகசியமாக நடத்தி முடித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். `எதற்காக இந்த யாகத்தை நடத்தினார்?' என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

ரஜினி வீட்டில் யாகம்
ரஜினி வீட்டில் யாகம்

நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கடந்த 2017 -ஆம் ஆண்டு அறிவித்தார். ரசிகர்களை மாவட்டவாரியாக சந்தித்த பிறகு, இந்த அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. இதைத் தொடர்ந்து நிர்வாகிகள் நியமனம், ரசிகர் மன்றம் பெயர் மாற்றம் என படுஜோராக வேலைகள் நடந்து வந்தன. அதன்பிறகு படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாகிவிட்டார் ரஜினி. அரசியல் குறித்த எந்தப் பேச்சுகளும் இடையில் இல்லை. அண்மையில், `தேவைப்பட்டால் மக்கள் நலனுக்காக நாங்கள் இணைவோம்' என்று கமல் விழாவில் பேசி அதிரவைத்தார் ரஜினி.

இந்தநிலையில், 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் பலவும் இப்போதே ஆரம்பித்துவிட்டன. ஆனால், இதுவரை அதற்கான பணிகளை ரஜினியின் மக்கள் மன்றம் தொடங்கவில்லை. இன்று வரையிலும் தொடர்ந்து புதுப்புது படங்களில்தான் ரஜினிகாந்த் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ரஜினி
ரஜினி

எப்போது கட்சி தொடங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பீமரத சாந்தி யாகம் என்ற பூஜையை போயஸ் கார்டனில் நடத்தியிருக்கிறார் ரஜினி. `இந்த யாகத்தின் பலன் என்ன?' என்று அர்ச்சகர்கள் சிலரிடம் கேட்டோம்.

"ஒரு மனிதனுக்கு 69 வயது முடிந்து 70-வது வயது தொடங்கும்போது செய்ய வேண்டிய விசேஷமான பூஜைக்கு பீமரத சாந்தி என்று பெயர். இதை, ஆயுளை விருத்தி செய்யும் ஸ்தலங்களில் பூஜையாகச் செய்வது வழக்கம். வீடுகளில் யாரும் செய்வதில்லை.

ஆனால், வீட்டில் வைத்து யாகமாகச் செய்வதால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் மனதில் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறவும் எதிர்க்க நினைப்பவர்களை வலுவிழக்கச் செய்வதும் இந்த யாகத்தின் மூலம் கிடைக்கும் பலன்களாகும்.

ரஜினி
ரஜினி

இந்த யாகத்தைக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிக நெருக்கமான உறவுகளை மட்டுமே வரவைத்து நடத்தி முடித்திருக்கிறார். வளர்பிறை நாளில் யாகத்தை நடத்தி முடித்தது முக்கியமான விஷயம்" என்கின்றனர் ஆச்சர்யமான குரலில்.