Published:Updated:

``நான் சர்வாதிகாரியாக மாறுவேன்!" - ஸ்டாலின் சீற்றத்தின் பின்னணி!

ஸ்டாலின்
ஸ்டாலின்

பொதுக்குழு உறுப்பினர்கள் என்றால் அனைவருமே சமம் என்ற அடிப்படையில் ஒரே மாதிரியான இருக்கை போடப்படும். ஆனால், இந்த முறை முதல் வரிசைகளில் சோபாவுடன் தடுப்பும் போடப்பட்டிருந்தது

"பொதுக்குழுவில் பேசியதைச் சொல்கிறீரா? குறுநில மன்னர்களாக மாவட்டச் செயலாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று பொதுக்குழுவில் சிலர் புகைந்ததே அவரின் இந்த ஆக்ரோஷத்துக்குக் காரணம் என்கின்றனர். யாரும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்துச் செயல்பட வேண்டாம். தொண்டர்கள்தான் கட்சியின் அடித்தளம்' என்று சீற்றமாகப் பேசியிருக்கிறார்." விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/33IATrd

"எதற்காக இந்தச் சீற்றமாம்?"

"வழக்கமாக, பொதுக்குழுவில் மூத்த நிர்வாகிகள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இந்த முறை மேலும் பலருக்கு வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் கட்சி நிர்வாகிகளை மதிப்பதே இல்லை' என்று ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் 'எங்கள் மாவட்டச் செயலாளரைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் பல ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறோம். ஆனால் புதிதாகக் கட்சிக்குள் வரும் பெண்களுக்கு சீட் வழங்குகிறார்கள்' என்று பற்றவைத்திருக்கிறார்."

'கருணாநிதி காலத்தில்கூட இவ்வளவு பிரமாண்டமாக பொதுக்குழு நடந்ததில்லை. தலைவரை மிஞ்சிய தனயனாகிவிட்டார்'

"சபாஷ்!"

"கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் புகார் பட்டியல் வாசித்திருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகுதான், கடுமையாகப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அவர் பேசும்போது, 'கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நமது வேட்பாளர்களுக்கு ஐம்பது லட்சம் கொடுக்கப்பட்டது' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் இப்படியா வெளிப்படையாகப் பேசுவது? ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகள் தர்மசங்கடத்தில் இருக்கிறார்களே என்று சிலர் முணுமுணுத்திருக்கிறார்கள்."

"துரைமுருகன் ஏதாவது கலாய்த்திருப்பாரே?"

"ஆமாம். 'கருணாநிதி காலத்தில்கூட இவ்வளவு பிரமாண்டமாக பொதுக்குழு நடந்ததில்லை. தலைவரை மிஞ்சிய தனயனாகிவிட்டார்' என்றவர், 'கடந்த தேர்தலில் நம் வெற்றியைப் பறித்தவர்களைக்கூட கூட்டணிக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பும் கொடுத்த ஸ்டாலினின் மாண்பைக் கண்டு வியக்கிறேன். அவர்களை இப்போது நாடாளுமன்றத்துக்கு அனுப்பி விட்டதால் இனிமேல் பிரச்னை இல்லை' என்று வைகோவையும் நக்கலடித்திருக்கிறார்."

"பொதுக்குழு ஏற்பாடுகள் நிஜமாகவே பிரமாண்டமாக இருந்ததாமே?"

"அதெல்லாம் உண்மைதான். ஆனால் அதுதான் பிரச்னையாகவும் மாறியிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் என்றால் அனைவருமே சமம் என்ற அடிப்படையில் ஒரே மாதிரியான இருக்கை போடப்படும். ஆனால், இந்த முறை முதல் வரிசைகளில் சோபாவுடன் தடுப்பும் போடப்பட்டிருந்தது. வெறும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சாதாரண நாற்காலியும் நிர்வாகிகளுக்கு சோபாவும் என்று பிரித்துக்காட்டியதை பலரும் ரசிக்கவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகியான ரகுமான்கானுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. நீண்ட நேர திண்டாட்டத்துக்குப் பிறகு பிளாஸ்டிக் சேரைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். ஆனால், சேலத்தைச் சேர்ந்த பெண் பேச்சாளர் ஒருவர் முதல் வரிசையில் ஜம்மென்று உட்கார்ந்திருந்தார். உதயநிதியை மேடையேற்றலாம் என்று பேச்சு எழுந்திருக்கிறது. அதை அவர் தவிர்த்துவிட்டாராம். 'இந்தப் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் வசம் இருந்த அதிகாரங்கள் தலைவர் வசம் மாற்றப்பட்டுள்ளன."

ரஜினி
ரஜினி

- இத்துடன், ரஜினியின் 'ஆடுபுலி ஆட்டம் பார்ட் 2' பின்னணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆளுங்கட்சி தயாராகிவரும் விதம் உள்ளிட்டவை குறித்த ஜூனியர் விகடன் கழுகாரின் அப்டேட்களை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: ரஜினியின் மாற்றம்... ஸ்டாலினின் சீற்றம்!

https://www.vikatan.com/government-and-politics/policies/mister-kazhugu-politics-and-current-affairs-rajini-nov-17

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > https://bit.ly/2KccySR

அடுத்த கட்டுரைக்கு