Published:Updated:

`அவர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களா?!’ - டெல்லி சீற்றமும் கூட்டு அறிக்கையின் பின்னணியும்

எடப்பாடி, ஓ.பி.எஸ்
News
எடப்பாடி, ஓ.பி.எஸ்

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கண்டிப்பாக என்.ஆர்.சி அமல்படுத்தியே தீருவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. உங்களது அமைச்சர்களைப் பார்த்துப் பேசச்சொல்லுங்கள்

``அ.தி.மு.க அமைச்சர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களா? அவர்களைப் பார்த்துப் பேசச்சொல்லுங்கள். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கண்டிப்பாக என்.ஆர்.சி அமல்படுத்தியே தீருவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கடுமையான வார்த்தைகளை டெல்லி தலைமை உபயோகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் முதல்வரும், துணை முதல்வரும் கூட்டறிக்கையை விட்டிருக்கும் சம்பவம் நடந்துள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க கருத்து மோதல்கள் ஏற்பட யார் காரணம்? இவர்கள் பதற அப்படி என்னதான் நடந்தது என்று அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்.

ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி
ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க - பா.ஜ.க கட்சிகளின் நடுவே நாளுக்கு நாள் கருத்து மோதல்கள் முற்றத்தொடங்கியுள்ள. இதற்கு டெல்லி தலைமை கொடுத்த அழுத்தத்தால் முதல்வரும், துணை முதல்வரும் பதறிப்போய்க் கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில், ``அ.தி.மு.க அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலைகுறித்து கழகத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்கக் கூடாது. மிகுந்த கட்டுப்பாடும், ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜனநாயகப் பண்பு நிறைந்த அ.தி.மு.க-வின் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் தீர ஆராய்ந்து, கழகத்தின் கொள்கை கோட்பாடுகளின்படி முடிவெடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ``கொள்கை முடிவுகளைப் பற்றிய தனி நபர்களின் விமர்சனங்களும், கருத்துகளும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கழகத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கழகத்தவர்களைக் கண்டிப்புடன் நெறிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்வர் ராஜா மற்றும் நிலோபர் கபில் ஆகியோரையே பெயர் குறிப்பிடாமல் இப்படி சொல்லியிருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்னதான் நடந்தது?. விசாரித்தோம்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், பா.ஜ.க-வோடு நெருக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது தமிழக அரசு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இணைந்தது. இன்று வரையிலும் கூட்டணியைத் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது. கூட்டணி தொடர்ந்தாலும், மத்திய பா.ஜ.க அரசு எடுக்கும் சில நடவடிக்கைகள், அ.தி.மு.க-வுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக அன்வர் ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க சீனியர்கள் பலரும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை அ.தி.மு.க ஆதரித்தது. இதற்கு, சிறுபான்மையின மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக, `கூட்டணியில், பா.ஜ.க இருந்தாலும், இடைத்தேர்தல் பிரசாரத்துக்குக்கூட அ.தி.மு.க-வினர் பா.ஜ.க-வினரை அழைக்கவில்லை' எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும், இரு கட்சிகளின் தொண்டர்களும் தனித்தனியே பிரசாரம் செய்தனர். சமீபத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிரசாரம் செய்தபோது, `பா.ஜ.க கூட்டணியில் நாங்கள் இல்லை' எனச் சொல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜா
அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜா

மேலும், மக்களவை முன்னாள் உறுப்பினர் அன்வர்ராஜா, `சிஏஏவை ஆதரித்ததால்தான் இஸ்லாமியர்கள் அ.தி.மு.க வுக்கு வாக்களிக்கவில்லை’ என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். மேலும், தனியார் ஊடகங்களில் மறைமுகமாக மத்திய அரசை விமர்சனம் செய்தும் பேசினார்.

அமைச்சர் நிலோஃபர் கபில்
அமைச்சர் நிலோஃபர் கபில்

`கூட்டணியில் இருப்பதையே கூறுவதற்குக் கூச்சப்படுவோருடன், நாம் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்' என்ற கேள்வியை பா.ஜ.க தரப்பில் எழுப்பியதோடு, பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், ``அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகள் குறைவுதான். ஆனால், மனவருத்தங்கள் நிறைய இருக்கிறது” என்று அ.தி.மு.க மீது வருத்தங்கள் இருப்பதை வெளிக்கொண்டு வந்தார். அத்தோடு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ``நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களைப் பிடித்திருப்போம்" என்று அ.தி.மு.க அரசு உள்ளடி வேலைகளைச் செய்துவிட்டது என்று அ.தி.மு.க அரசின் குறைகளை விமர்சனம் செய்து பேசினார்.

இந்த நிலையில் இரு கட்சிகளுக்குள் கருத்து மோதல்கள் வலுத்துக்கொண்டே சென்றன. இந்த நிலையில் அ.தி.மு.க -வினர் செய்த வேலைகளை அப்படியே டெல்லி தலைமைக்குத் தகவலாக அனுப்பியிருக்கிறது பா.ஜ.க. இதைப் பார்த்துத்தான் டெல்லி தலைமை எடப்பாடியிடம், `உங்களது அமைச்சர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களா? எதற்கும் ஒரு அளவு இருக்கிறது' என்று பேசியிருக்கிறார்கள்.

அமித் ஷா
அமித் ஷா

அத்தோடு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கண்டிப்பாக என்.ஆர்.சி அமல்படுத்தியே தீருவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. உங்களது அமைச்சர்களைப் பார்த்து பேசச்சொல்லுங்கள் என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அ.தி.மு.க தலைமை, வேறு வழியில்லாமல் இருவரும் பதறிப்போய்க் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அத்தோடு `அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருக்கிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்' என்றும், `பா.ஜ.க வைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது' என்றும் மறைமுக உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை!'' என்கிறார்கள் அரசியல்வட்டாரத்தில்.