Published:Updated:

`விக்கிரவாண்டியில் தி.மு.க ஏன் தோற்றது?' - ஸ்டாலினிடம் விளக்கிய வேல்முருகன்

வேல்முருகன் சந்திப்புக்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள்.

வேல்முருகன் - ஸ்டாலின்
வேல்முருகன் - ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இடைத்தேர்தலுக்குப் பின் சந்திக்க விரும்பினேன். அதன் அடிப்படையில்தான் இன்று சந்தித்தேன். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்பதே மிகப்பெரிய சந்தேகம். ஒருவேளை நடந்தால் நாங்கள் கண்டிப்பாக தி.மு.க கூட்டணியில் இணைந்தே போட்டியிடுவோம்'' என்றார்.

வேல்முருகன்
வேல்முருகன்

ஆனால், வேல்முருகன் சந்திப்புக்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அவரின் கட்சி நிர்வாகிகள்.

மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில்,``விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் எங்கள் கட்சிக்கு 20,000 முதல் 25,000 வாக்குகள் வரை இருக்கின்றன. எங்கள் கட்சி மிக வலுவாக உள்ள தொகுதி அது. ஆனால், அந்தத் தொகுதி தி.மு.க உள்ளூர் நிர்வாகிகள், எங்கள் கட்சியின் மாவட்டத் தலைவரை, கட்சி நிர்வாகிகளை முறையாக அணுகவில்லை. எங்கள் கட்சித் தொண்டர்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

`அசுரன் படத்தின் வெற்றி மிக முக்கியமானது.. ஏனென்றால்..!’- காரணம் பகிரும் பா.இரஞ்சித்

எங்களை சிறிய கட்சி என்று அவர்கள் கருதினார்கள். அதனால்தான் தி.மு.க தோற்றது. அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தலில் பொன்முடி சரியான மரியாதை தந்தார். எங்கள் கட்சியினருக்கு முக்கியத்துவம் தந்தார். எங்கள் கட்சியின் சார்பில் மூன்று பொதுக்கூட்டங்களை நடத்தினோம். எங்கள் தலைவர் கலந்துகொண்டு வாக்கு கேட்டார்.

`ஆழ்வார்பேட்டையில் முடிவு; அறிவாலயத்தில் சம்பிரதாயம்!’-  விக்கிரவாண்டி தி.மு.க. தொண்டர்கள் அதிருப்தி

ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அது நடைபெறவில்லை. அதுகுறித்துதான் எங்கள் தலைவர் தி.மு.க தலைவரிடம் பேசியிருக்கிறார். எங்கள் கட்சி வலுவாக உள்ள இடங்களில் போட்டியிடுவதற்கான கோரிக்கைகளையும் வேல்முருகன் முன்வைத்திருக்கிறார். கண்டிப்பாக விக்கிரவாண்டியில் நடந்த தவறு உள்ளாட்சித் தேர்தலில் நடக்காது'' என்கிறார் உறுதியாக.