Published:Updated:

``உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்!" - திருச்சி, திண்டுக்கல்லில் அமைச்சர்கள் தீர்மானம் நிறைவேற்றம்

உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர்கள்

தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திருச்சி, திண்டுக்கல் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

``உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்!" - திருச்சி, திண்டுக்கல்லில் அமைச்சர்கள் தீர்மானம் நிறைவேற்றம்

தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திருச்சி, திண்டுக்கல் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Published:Updated:
உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர்கள்

திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு மாவட்டத்தின் சார்பாக திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியும், கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழநி எம்.எல்.ஏ-யுமான ஐ.பி.செந்தில்குமாரும் கலந்துகொண்டனர்.

அர.சக்கரபாணி
அர.சக்கரபாணி
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் வருகிற ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவைச் சிறப்பாக மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக-வினர்
திமுக-வினர்

அதேபோல, தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திண்டுக்கல் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், எம்.பி வேலுச்சாமி, திண்டுக்கல் மேயர் இளமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஐ.பி.செந்தில்குமார்
ஐ.பி.செந்தில்குமார்

இது குறித்து திண்டுக்கல் தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``முதல்வர் பொறுப்பேற்றதும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என அவரின் குடும்ப நண்பர் அன்பில் மகேஸ் வெளிப்படையாகக் கூறிவிட்டார். இதையடுத்து அனைவரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனக் கூறத் தொடங்கிவிட்டனர். ஐ.பி., மகன் ஐ.பி.செந்தில்குமார், உதயநிதியின் நண்பர் என்பதால் தீர்மானம் போட்டு தனது பாசத்தைக் காட்டியுள்ளார்" என்றனர்.

அதேபோல... இன்று காலை திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜூன் 3-ம் தேதி கலைஞரின் 99-வது பிறந்தநாள்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதோடு, நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டுமென ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென சிறப்புத் தீர்மானம் இயற்றினர். விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவிருக்கிறது எனச் சொல்லப்பட்டுவந்த நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழி இயற்றியுள்ள இந்தத் தீர்மானம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். "தனக்குத் துணையாகவும் நம்பிக்கையாகவும் ஒரு ஆள் இருக்க வேண்டுமென கலைஞர் அவர்கள், ஸ்டாலினைத் துணை முதல்வராக ஆக்கினார். அப்படிப் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளிலிருந்து இன்றைக்கு இந்தியாவின் சிறந்த முதல்வராக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். அதேபோல இளைஞரணிப் பதவி, எம்.எல்.ஏ என வலம்வரும் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது... உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென மனதாரத் தீர்மானம் போட்டிருக்கிறோம். விரைவில் அவர் அமைச்சரும் ஆவார். பொறுத்திருந்து பாருங்கள்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism