Published:Updated:

``கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்... ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் முதல்வர்!" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்‌, ``பிரதமர் மோடி முன்பு மாப்பிள்ளைபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்கிறார்’’ எனப் பேசினார்.

``கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்... ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் முதல்வர்!" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்‌, ``பிரதமர் மோடி முன்பு மாப்பிள்ளைபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்கிறார்’’ எனப் பேசினார்.

Published:Updated:
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``நகராட்சித் தேர்தலில் நம்மை வெற்றிபெறவைத்த மக்களுக்காக இந்த மண்ணைத் தொட்டுக் கும்பிட்டால், ஒவ்வொரு வீட்டையும் தொட்டுக் கும்பிடுவதை போன்றது. இப்போதிருந்தே நாம் நல்ல பிள்ளையாக நடந்தால்தான் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியும். இந்த ஒராண்டுச் சாதனை மூலம் இன்னும் 20 ஆண்டுகள் வரை மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வராக இருப்பார்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க-வை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை. அதனால் அ.தி.மு.க சண்டைக்கு வரப் பார்க்கிறது. அவங்க (அ.தி.மு.க) கட்சிக்குள்ளேயே நிறைய சண்டை நடக்கிறது. அதனால் முதலில் நீங்கள் சேர்ந்துவிட்டு, அதற்குப் பிறகு எங்களிடம் சண்டைக்கு வாருங்கள். அண்ணாவுக்கு பின்பு கலைஞர், கலைஞருக்குப் பின்பு முதல்வர் ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வராக வருவார். உதயநிதி ஸ்டாலின் முதல்வராகத் தயாராக இருக்கிறார்.

தி.மு.க-வில் வாரிசு அரசியல் என்பது கிடையாது. உதயநிதி முதல்வரின் வாரிசாக இருந்தாலும் கட்சிக்குள் அடிப்படையில் கஷ்டப்பட்டுதான் மேலே வந்திருக்கிறார். கடந்த 10 வருடங்கள் தமிழகத்தில் கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றது. ஆனால் தற்போது நமது கழகத்தின் ஆட்சி, நல்ல ஆட்சி. நல்ல முதல்வரின் ஆட்சி.

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.

முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அண்ணனாக, தகப்பனாக, தலைவராக இருக்கிறார். அ.தி.மு.க-வினர் அரசின் கஜானாவைச் சுரண்டிவிட்டார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்து பார்த்ததும் கஜானாவில் ஒன்றும் இல்லை. வெறும் பெட்டி மட்டும்தான் இருந்தது. அதில் 1 ரூபாய் காசுகூட இல்லை. பெட்டியில் வெறும் கடன் பேப்பர் மட்டுமே இருக்கிறது.

தி.மு.க ஆட்சியில், பெண்களுக்குத்தான் யோகம். ஆண்கள் கையில் பணம் கொடுத்தால் பணம் வீடு சேராது என்பதை தெரிந்தே தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறார். டெல்லிக்கு பயப்படாத தலைமை, நமது தலைமை. ஒவ்வொரு சந்திப்பிலும் பிரதமர் மோடி முன் மாப்பிள்ளைபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்கிறார். ஆனால் எடப்பாடியோ டெல்லி என்றால் தலையைக் குணிந்துவிடுவார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளும் பா.ஜ.க பினாமியாகத்தான் அ.தி.மு.க ஆட்சி நடத்தியது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism