Published:Updated:

“நான் ஜெயலலிதா பொண்ணு; என் கணவர் தி.மு.க விசுவாசி!”

ரோஜா – செல்வமணி
பிரீமியம் ஸ்டோரி
ரோஜா – செல்வமணி

ரோஜா – செல்வமணி கலகல

“நான் ஜெயலலிதா பொண்ணு; என் கணவர் தி.மு.க விசுவாசி!”

ரோஜா – செல்வமணி கலகல

Published:Updated:
ரோஜா – செல்வமணி
பிரீமியம் ஸ்டோரி
ரோஜா – செல்வமணி

ஆந்திராவின் அரசியல் களம் எப்போதும் அனல் தகிக்கும். அதில், முன்னாள் முதல்வர் என்.டி.ராம ராவுக்குப் பிறகு, சினிமாவிலிருந்து சென்று தடம் பதித்த ஒரே நட்சத்திர முகமான நடிகை ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வ மணியைக் கரம்பிடித்து தமிழகத்தின் மருமகள் ஆனார். இரண்டாவது முறையாகவும் தான் எம்.எல்.ஏ-வாகத் தேர்வான நகரி சட்டமன்றத் தொகுதியிலேயே குடியேறியவர், பரபரப்பான பணிகளுக்கிடையே தனது ஒருநாள் பொழுதை நமக்காக ஒதுக்கினார்.

அரசு மருத்துவமனை ஒன்றில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையில் ஜே.சி.பி வாகனத்தை இயக்கி, ஆச்சர்யம் கொடுத்தார். தொகுதிப் பணியை முடித்ததும், புதிதாகக் கட்டியிருக்கும் தனது பிரமாண்ட வீட்டைச் சுற்றிக்காட்டியபடி பேட்டிக்குத் தயாரானார்.

“நான் ஜெயலலிதா பொண்ணு; 
என் கணவர் தி.மு.க விசுவாசி!”

தனக்கு நிழலாக இருந்து ஊக்கமளிக்கும் கணவர் செல்வமணியை, தம்பதி பேட்டிக்காக, சென்னையிலிருந்து வரவழைத்திருந்தார் ரோஜா. தங்களின் 30 ஆண்டுக்கால காதல் குறித்து முதலில் பேசத் தொடங்கினார் ரோஜா.

“கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சு, இவர் டைரக்ட் செஞ்ச ‘செம்பருத்தி’ படத்துல என்னை அறிமுகப்படுத்தினார். அப்போ என்கிட்ட பேசவே இவர் ரொம்ப கூச்சப் படுவார். ஆனா, படம் முடியறதுக்குள்ள எங்களுக்குள்ள காதல் வந் துடுச்சு. குடும்பத்தினரின் பொருளாதாரத் தேவைக்காக ஒரு படம் தயாரிச்சுட்டு, அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு ‘அதிரடிப் படை’ படத்தை உருவாக்கி னோம். அந்தப் படத்தால ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிசெய்ய, பதினொரு வரு ஷங்கள் நாங்க சினிமாவுல போராட வேண்டியதா போச்சு. அந்த கஷ்டத்துலதான் உண்மையான அன்பை ரெண்டு பேருமே உணர்ந்தோம். எல்லா கடனையும் அடைச்சுட்டு 2002-ல் கல்யாணம் செஞ்சு கிட்டோம்” புன்னகையுடன் கூறும் ரோஜாவின் பார்வை தன்மீது திரும்ப, செல்வமணி தொடர்ந்தார்...

“குடும்பத்தினரின் முழு ஆதரவு இருந்ததால, கல் யாணத்துக்கு முன்பு பல நிகழ்ச்சிகளுக்கும் நாங்க ஒண்ணாவேதான் போவோம். ‘ஹீரோயின் ஹீரோவைக் காத லிச்சா நல்லாயிருக்கும். ஆனா, டைரக்டரைக் காதலிச்சா நல்லாயிருக்காது’ன்னு காது படவே பேசினாங்க. அதனால, நான் பட வாய்ப்பு கேட்டுப் போறப்போ, ‘படத்துல ரோஜா இருக்கக் கூடாது’னு சொல்லி யிருக்காங்க. எங்க காதலால, ரோஜாவும் நிறைய பட வாய்ப்புகளை இழந்தாங்க. அதையும் தாண்டி தமிழ், தெலுங்குல நிறைய ஹிட்ஸ் கொடுத்து முன்னணி நடிகையா உயர்ந்தாங்க. நான் எடுத்த பல படங்கள்ல ரோஜாவை நடிக்க வெச்சதுடன், இவரோட நூறாவது படத்துக்காகவே, என் வழக்கமான அரசியல் ஜானருக்கு மாற்றா, ‘துர்கா’ங்கிற (பொட்டு அம்மன்) தெலுங்குப் படத்தை எடுத்தேன்.

“நான் ஜெயலலிதா பொண்ணு; 
என் கணவர் தி.மு.க விசுவாசி!”

‘தமிழ் தேசியக் கொள்கையாளரா இருந்து கிட்டு, தெலுங்குப் பெண் ரோஜாவைக் கல்யாணம் செஞ்சுக்கிறது சரியா?’னு பலரும் என்கிட்ட கேட்டாங்க. ஆட்சி, அரசியல் நிர்வாகத்துல மட்டுமே அந்தக் கொள்கையை நான் கடைப் பிடிச்சேன். அதன்படி, ரோஜாவின் அரசியல் நிலைப்பாட்டுல ஆந்திரா தான் சரியா இருக்கும்னு அதுல நான் உறுதியா இருந்தேன்” என்பவரின் பேச்சால் சிரிப்பலை எழுந்தது.

“ஜெயலலிதா அம்மா, தன் பொண்ணு மாதிரி என்மேல அன்பு வெச்சிருந்தாங்க. இவர் குடும்பத்துல பலரும் தி.மு.க-வினர். இது தெரிஞ்சும் எங்க கல்யாணத்துக்கு வாழ்த்த வந்த ஜெயலலிதா அம்மா உட்பட பிரபலங்கள் பலரும், ‘என் பொண்ணை நல்லபடியா பார்த்துக்கோங்க’னு இவர் கிட்ட சொன்னாங்க. கல் யாணத்துக்குப் பிறகு, குடும்ப நிர்வாகத்தால அடிக்கடி எங்களுக்குள் சண்டை ஏற் பட்டுச்சு. ஆனாலும், அவர் தான் விட்டுக்கொடுப்பார்.

‘நமக்குப் பிடிவாதமான கொள்கை எது இருந்தாலும், மனைவி உட்பட குடும்பத்தினர் கிட்ட பல விஷயங்கள்லயும் தோல்வியடைஞ்சாதான் வாழ்க்கையில வெற்றி பெற முடியும்’னு சொல்லுவார். இதை ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில சொன்னப்போ, ரஜினி சார் உட்பட பலரும் கைதட்டி ஆரவாரம் செஞ்சாங்க. ‘இத்தனை வருஷம் காத்திருந்து கல்யாணம் செஞ்சது போலவே, கல்யாணத்துக்குப் பிறகு, எந்தச் சூழல்லயும் பிரிவுங்கிற பேச்சுக்கே இடம் தராம ஒத்துமையா வாழணும்’னு ஜெயலலிதா அம்மா எங்களுக்குச் சொன்ன ஆலோ சனையை மறக்காம இருக்கோம்” என்று நெகிழ்ச்சியாகிறார் ரோஜா.

மனைவியின் அரசியல் பயணம் குறித்துப் பேசும் செல்வமணியின் குரலில் உற்சாகம் கூடுகிறது. “சந்திரபாபு நாயுடு முதலமைச்சரா இருந்தப்போ, அவர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரா இருந்த ரோஜா, நக்சலைட்டு களின் அச்சுறுத்தலை மீறி ஆபத்தான பகுதிகள்லயும் பயமில்லாம பிரசாரம் செஞ்சாங்க. ரெண்டாவது முறை கர்ப்பமா இருந்தபோது, டாக்டர்கள் சொன்னதை மீறி, கட்சிக்காக டிராவல் பண்ணி, கூட்ட நெரிசல்ல சிக்கினதால, ரத்தப்போக்கு அதிகமாகி, கால்களைத் தொங்கப் போட் டாலே குழந்தை வெளியே வந்திடும்ங்கிற ஆபத்தான நிலைமை உண்டாச்சு. ரெண்டு கால்களையும் 50 நாள்களுக்கு அசைக்க முடியாதபடி மேல்நோக்கி வெச்சிருந்து, பெரும் சிரமத்துக்குப் பிறகு, குழந்தையைப் பெத்தெடுத்தாங்க. உடனே கைக்குழந்தை யுடன் பிரசாரத்துக்குப் போனாங்க. ஒருகட்டத்துல முழுநேர அரசியல் ஈடுபாடு பத்தி ரோஜா சொன்னப்போ, ‘அரசியல் உட்பட எல்லாத் துறைகள்லயும் பெண்களுக் கும் சம உரிமை இருக்கு. அதனால, வீடு, குடும்பம்னு உன் உலகத்தைச் சுருக்கிக்காதே’னு சொன்னேன்.

சந்திரபாபு நாயுடுவின் கட்சியில இருந்தப்போ, சொந்தக் கட்சியினராலேயே ரெண்டு முறை தோல்வியடைஞ்சு, ஒரு கட்டத்துல அரசியல்லேருந்தே விலக நினைச் சாங்க ரோஜா. ‘ஜெயிச்சதுக்குப் பிறகு, விலகினாகூட வெற்றிதான். ஆனா, தோல்வி யைக் கண்டு பயந்துட்டதா ஆகிடக் கூடாது’னு நான் சொன்னதுக்காகவே, முதல்வர் ஜெகன் சார் கட்சியில சேர்ந்து வேலை செஞ்சாங்க. இனி எப்படிப்பட்ட சவால்கள் வந்தாலும் கடைசிவரை போராடுவேன்’னு இப்போ உறுதியோடு இருக்காங்க” என்பவரின் பேச்சை ரசிக்கிறார் ரோஜா.

“பெரும்பாலும் ஆந்திராவுலதான் இருப் பேன். எங்க பையன் சென்னையில ஸ்கூல் படிக்கிறான். பொண்ணு வெளிநாட்டுல காலேஜ் படிக்கிறாள். ‘ஃபெப்சி’ சங்கம், சினிமா வேலையா இவர் சென்னையிலதான் அதிகம் இருப்பார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் சென்னை வந்திடுவேன். நான் அன்பு கொஞ்சுற அம்மா. அன்பும் கண்டிப்பும் கலந்து படிப்பின் அவசியத்தோடும், சுயமா இயங்கணும்ங்கிற நம்பிக்கையோடும் பிள்ளைகளை வழிநடத்துற பொறுப்பான அப்பா இவர்” என்று கணவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு ரோஜா கூற, இருவரின் முகத்திலும் சிநேகப் புன்னகை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism