Published:Updated:

தண்ணீர்த் தொட்டி, பாத்ரூம் எதுவும் தப்பவில்லை... ஆர்.காமராஜ் சம்பந்தி வீட்டு ரெய்டில் நடப்பது என்ன?

முன்னாள் அமைச்சர் காமராஜ்

ஆர்.காமராஜ் தஞ்சாவூரில், `ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டியிருக்கிறார். அதிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

தண்ணீர்த் தொட்டி, பாத்ரூம் எதுவும் தப்பவில்லை... ஆர்.காமராஜ் சம்பந்தி வீட்டு ரெய்டில் நடப்பது என்ன?

ஆர்.காமராஜ் தஞ்சாவூரில், `ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டியிருக்கிறார். அதிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
முன்னாள் அமைச்சர் காமராஜ்

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகக் கூறி அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஆர்.காமராஜ், டாக்டர்களான அவரின் மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர்மீது வழக்கு பதிவுசெய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்திவருகின்றனர். தஞ்சாவூரிலுள்ள ஆர்.காமராஜின் சம்பந்தி டாக்டர் மோகன் வீட்டில் தண்ணீர்த் தொட்டி, பாத்ரூம் என ஒரு இடம் விடாமல் சோதனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டாக்டர் மோகனிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை
டாக்டர் மோகனிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை

அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 58.44 கோடி சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவுசெய்து இன்று ரெய்டு நடத்திவருகின்றனர். மன்னார்குடியிலுள்ள ஆர்.காமராஜ் வீடு, தஞ்சாவூர் பூக்கார வஸ்தா தெருவிலுள்ள ஆர்.காமராஜின் சம்பந்தி டாக்டர் மோகன், புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்படவிருக்கும் `ஸ்ரீ காமாட்சி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை’... எனத் தமிழ்நாடு முழுவதும் 49 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலை 6 மணிக்கெல்லாம் இரண்டு கார்களில் ஒன்பது பேர்கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் டீம், டாக்டர் மோகன் வீட்டுக்குச் சென்று உடனேயே ரெய்டு நடத்தத் தொடங்கினர்.

ஆர்.காமராஜ் கட்டியிருக்கும் மருத்துவமனை
ஆர்.காமராஜ் கட்டியிருக்கும் மருத்துவமனை

ஒன்றரை மணி நேரத்ர்ஹுக்கு மேலாக வீட்டுக்குள் வைத்து மோகன், அவருடைய மகள் உள்ளிட்டோரிடம் சொத்து குறித்த விவரங்களைக் கேட்டுள்ளனர். இதை லஞ்ச ஒழிப்பு போலீஸார் முழுவதுமாக வீடியோ எடுத்துக்கொண்டனர். பின்னர் வீட்டின் முன் பகுதியிலிருந்த தண்ணீர்த் தொட்டி, பாத்ரூம், வீட்டுக்குள்ளே இருக்கும் பாத்ரூம்கள் என ஒன்றை விடாமல் சோதனை நடத்தினர்.

இதையடுத்து வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை திறக்கச் சொல்லி அதற்குள்ளும் சோதனை நடத்தினர். காருக்குள் சில பேப்பர்கள் இருந்தன. அது குறித்த விவரங்களை மோகனிடம் கேட்டறிந்ததுடன், அந்த பேப்பர்களை வாங்கிக்கொண்டனர். பின்னர் மீண்டும் தண்ணீர்த் தொட்டிக்குள்ளும், பாத்ரூமிலும் ஏதாவது இருக்கிறதா என எட்டிப்பார்த்தனர். மூன்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வீட்டு மொட்டைமாடிக்குச் சென்று சோதனை செய்தனர்.

ஆர்.காமராஜ் சம்பந்தி டாக்டர் மோகன் வீடு
ஆர்.காமராஜ் சம்பந்தி டாக்டர் மோகன் வீடு

அங்கிருந்தபடி அந்தப் பகுதி முழுவதையும் வீடியோ கேமராவில் பதிவு செய்துகொணடனர். ஆர்.காமராஜ் தஞ்சாவூரில் `ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரமாண்டமான முறையில் கட்டியிருக்கிறார். இதை ஆர்.காமராஜின் மகன்களான டாக்டர்கள் இனியன், இன்பன், சம்பந்தி டாக்டர் மோகன் உள்ளிட்டோர் நிவாகம் செய்யவிருக்கின்றனர்.

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வந்து மருத்துவமனையைத் திறந்துவைக்க அழைப்பு கொடுத்திருந்தனர். அவரும் தேதி கொடுத்திருந்தாராம். ஆனால் சில காரணங்களால் மருத்துவமனை திறப்பு தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்திவருவதுடன், பெரும்பாலும் மருத்துவமனை குறித்துக் கேட்டறிந்தனர். டாக்டர் மோகன் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதித் தொடர்ந்து அதிகாரிகளின் காரிலிருந்து இரண்டு லேப்டாப்கள், பிரிண்டர் மெஷின் போன்றவற்றை வீட்டுக்குள் எடுத்துச் சென்றனர்.

கைப்பற்றிய ஆவணங்களை ஸ்கேன் செய்து லேப்டாப்பில் சேவ் செய்துகொண்டனர்.`` ரெய்டு மாலை வரை தொடரும். யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீங்க’’ எனக் கூறிய அதிகாரிகள் வெளி கேட்டைப் பூட்டிவிட்டு சோதனையில் ஈடுப்பட்டுவருகின்றனர்.