Published:Updated:

``சசிகலா, வைத்திலிங்கம் சந்திப்பு திட்டமிட்ட ஒன்று” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்

ஆர்.காமராஜ்

``சசிகலா, வைத்திலிங்கம் திட்டமிட்டே சந்தித்துக்கொண்டனர். அ.தி.மு.க-வால் பலனடைந்தவர்கள், அ.தி.மு.க-வை பலப்படுத்த வேண்டுமே தவிர அழிக்க நினைக்கக் கூடாது. திமுக-வுக்கு துணைபோகக் கூடாது” என தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

``சசிகலா, வைத்திலிங்கம் சந்திப்பு திட்டமிட்ட ஒன்று” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்

``சசிகலா, வைத்திலிங்கம் திட்டமிட்டே சந்தித்துக்கொண்டனர். அ.தி.மு.க-வால் பலனடைந்தவர்கள், அ.தி.மு.க-வை பலப்படுத்த வேண்டுமே தவிர அழிக்க நினைக்கக் கூடாது. திமுக-வுக்கு துணைபோகக் கூடாது” என தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

Published:Updated:
ஆர்.காமராஜ்

மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க அரசைக் கண்டித்தும், அதை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் அ.தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டார். கடந்த முறை விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்.காமராஜை `சோழமண்டல தளபதி’ எனக் குறிப்பிட்டு போஸ்டர் மற்றும் ஃபிளெக்ஸ் வைத்து நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.காமராஜ்
அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.காமராஜ்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த முறை, `சோழமண்டல தளபதி’ என்பதைத் தவிர்த்துவிட்டனர். மற்ற ஊர்களில் ஆர்ப்பாட்டம் காலையிலேயே நடைபெற்ற நிலையில் ஆர்.காமராஜ் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மாலையில் ஏற்பாடு செய்து நடத்தினர். திரட்டப்பட்டிருந்த கூட்டத்தைப் பார்த்தபடியே உற்சாகமாக மேடை ஏறினார் ஆர்.காமராஜ். பின்னர் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இதையடுத்து ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம், ``மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அப்படிக் குறைக்காவிட்டால் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அதில் எடுக்கும் முடிவின்படி அதிமுக-வின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்.

மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததால்தான் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியிருந்தது என திமுக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போதும் மத்திய அரசிடமிருந்து அழுத்தம் இருந்தது. ஆனால் நாங்கள் ஒருபோதும் மின்கட்டணத்தை உயர்த்தவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அதிமுக இருக்கிறது. சசிகலா, `அ.தி.மு.க அலுவலகம் செல்வேன்’ என்பது ஆசைக்குச் சொல்லிக்க வேண்டியதுதான் நடக்கப்போவதில்லை.

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

சசிகலா, வைத்திலிங்கம் சந்தித்துக்கொண்டது தற்செயலாக நடந்தது எனக் கூறுகிறார்கள். ஆனால் அந்தச் சந்திப்பு என்பது திட்டமிட்ட செயல். அ.தி.மு.க-வால் பலனடைந்தவர்கள் அ.தி.மு.க-வை பலப்படுத்த வேண்டுமே தவிர அழிக்க நினைக்கக் கூடாது. திமுக-வுக்கு துணைபோகக் கூடாது. அ.தி.மு.கவு-க்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்” என்றார்.

கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் மருத்துவக் கல்லூரிப் பகுதி கழகச் செயலாளரான சரவணன், காந்தி உள்ளிட்டோரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டார் ஆர்.காமராஜ். வைத்திலிங்கம் ஏரியாவுக்கு ஆர்.காமராஜை அழைத்துவந்து மாஸ் காட்டியுள்ளனராம். அதற்காக சரவணன் உள்ளிட்டோரை காரில் அழைத்துச் சென்று தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார் ஆர்.காமராஜ் எனக் கட்சி நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள்.