Published:Updated:

``மூன்றே மாதங்களில் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர்” - ஆர்.காமராஜ் ஆரூடம்

ஆர்.காமராஜ்

``தஞ்சாவூர் மாவட்ட அதிமுக, தனிப்பட்ட ஒருவருக்கானது மட்டுமல்ல. அதிமுக தொண்டனுக்கான இயக்கம். அதில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம், பொறுப்புக்கு வரலாம்” என முன்னாள் அமைச்சரான ஆர்.காமராஜ், வைத்திலிங்கத்தைச் சாடிப் பேசினார்.

``மூன்றே மாதங்களில் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர்” - ஆர்.காமராஜ் ஆரூடம்

``தஞ்சாவூர் மாவட்ட அதிமுக, தனிப்பட்ட ஒருவருக்கானது மட்டுமல்ல. அதிமுக தொண்டனுக்கான இயக்கம். அதில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம், பொறுப்புக்கு வரலாம்” என முன்னாள் அமைச்சரான ஆர்.காமராஜ், வைத்திலிங்கத்தைச் சாடிப் பேசினார்.

Published:Updated:
ஆர்.காமராஜ்

அதிமுக சார்பில், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் `இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மூன்று மாதங்களில் அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பார், தஞ்சாவூர் மாவட்டம் தனிப்பட்ட ஒருவருக்கானது மட்டுமல்ல’ என முன்னாள் அமைச்சரான ஆர்.காமராஜ், வைத்திலிங்கத்தைச் சாடினார்.

தி.மு.க அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
தி.மு.க அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ரயிலடியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எதிரே அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. `சோழ மண்டலத் தளபதி’ என அழைக்கப்பட்ட வைத்திலிங்கத்தின் கோட்டையான தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுமே அதிமுக-வினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வைத்திலிங்கத்துக்கு நெருக்கமாக இருந்த பலர் ஒற்றைத் தலைமை பிரச்னையில் எடப்பாடி பழனிசாமி அணிக்குச் சென்றதைத் தொடர்ந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் தொண்டர்கள் கூட்டத்தைத் திரட்ட வேண்டும் என எடப்பாடி பக்கம் சென்ற நிர்வாகிகள் பலர் கடந்த சில தினங்களாகக் கடுமையாக வேலை செய்தனர். இதில் கலந்துகொள்வதற்காக வந்த முன்னாள் அமைச்சரான ஆர்.காமராஜ் வந்த கார் தொண்டர்களைக் கடந்து சென்று, ஆர்ப்பாட்ட மேடையைச் சேர்வதற்கு பத்து நிமிடங்களுக்கு மேல் ஆனது.

தஞ்சாவூர் அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் கூட்டம்
தஞ்சாவூர் அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் கூட்டம்

முன்னாள் மருத்துவக் கல்லூரிப் பகுதி கழகச் செயலாளரான சரவணன், ஆர்.காமராஜுக்கு வீரவாளை நினைவுப்பரிசாக வழங்கினார். பின்னர் நிர்வாகிகள் அனைவரது பெயரைக் கூறி சரவணன் வரவேற்க, `லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கு... எல்லா நிர்வாகிகளுமே நம்ம பக்கம் வந்துட்டாங்கனு இதன் மூலம் தெரிஞ்சுக்க முடியுது” என ஆர்.காமராஜ் உற்சாகமடைந்தார். அப்போது பேசிய சரவணன், ``சிலர் எங்களை துரோகக் கூட்டம் எனக் கூறிவருகின்றனர். நாங்கள் துரோகக் கூட்டம் இல்லை; துரோகத்தை ஒழிக்க வந்த கூட்டம்” எனப் பேச, அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி பலரும் கைதட்டி அதை ஆமோதித்தனர்.

பின்னர் பேசிய ஆர்.காமராஜ், ``ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்னும் மூன்று மாதங்களில் அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பார். அதிமுக ஆட்சியில் ஏழைகளின் பசி போக்கப்பட்டது. விலையில்லாத அரிசி கொடுக்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார்.

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிசெய்த எடப்பாடியார், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒன்றான மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. `மின் கட்டண உயர்வு சாதாரண மக்களை பாதிக்காது, தமிழக மக்களை பாதிக்காது எனவும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியம் தர மாட்டோம் எனவும் மத்திய அரசு கூறிவிட்டது. அவர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக’ மின்சாரத் துறை அமைச்சர் பொய் சொல்கிறார்.

மக்களுக்கான ஆட்சி என சொல்கின்ற தி.மு.க., மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.150 சதவவிகிதம் சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கான கட்டணத்தையும் உயர்த்தியுள்ளனர். விலைவாசி விண்ணை முட்டி நிற்கிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்றார்கள். மத்திய அரசு விலையைக் குறைத்த பிறகும் திமுக அரசு குறைக்கவில்லை. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்தான் திமுக ஆட்சிக்கு வருவதற்குக் காரணம். ஆனால் இன்றைக்கு அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.காமராஜ்
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.காமராஜ்

அனைத்து தரப்பும் திமுக ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்படும் என காத்துக்கொண்டிருக்கின்றனர். அதனாலேயே இங்கு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. உணவுத்துறை அமைச்சராக ஒன்பது ஆண்டுகள் இருந்த காலத்தில் நெல் கொள்முதலில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இன்றைக்கு தஞ்சாவூர் தொடங்கி காஞ்சிபுரம் வரை நெல் கொள்முதல் செய்வதில் பிரச்னையும், குழப்பமும் நீடிக்கிறது. கொள்முதலும் செய்யப்படுவதில்லை.

`ஏன் இவ்வளவு டன் நெல் எடுக்குறீங்க... கட்டுப்படுத்தி எடுங்க’ என்று அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தொடங்கி பெண்கள், சாதாரண மக்கள் என அனைத்து தரப்புக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இன்றைக்கு மாணவர்கள் தொடங்கி பலருக்கும் பிரச்னை. சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. இதற்கெல்லாம் திமுக அரசின் கையாளாகாததனமே காரணம். வரும் 1-ம் தேதி பயிர்காப்பீட்டுக்கான கடைசி தினம். ஆனால் விவசாயிகளிடம் இதுவரை பிரீமியம் தொகை வாங்கவில்லை. இன்ஷூரன்ஸ் கம்பெனி எதுவென்றே விவசாயிகளுக்குத் தெரியவில்லை.

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு அதிக அளவில் பயிர் காப்பீடு இன்ஷூரன்ஸ் தொகையை பெற்றுக்கொடுத்தது எடப்பாடியார்தான். முக்கியமான இந்த காலகட்டத்தில் அதுவும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் கூட்டம் கூடியிருப்பது சிறப்பு. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் கூடுமா, கூட்டம் நடக்குமா, பெரிய அளவில் அமையுமா எனச் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் தனிப்பட்ட ஒருவருக்கானது மட்டுமல்ல. அ.தி.மு.க தொண்டனுக்கான இயக்கம். அதில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம். தலைமைப் பொறுப்புக்கு வரலாம்” என வைத்திலிங்கத்தையும் மறைமுகமாகச் சாடினார். பின்னர் விலைவாசிக்கு எதிரான கோஷங்களுடன் கூட்டம் நிறைவுபெற்றது.