Published:Updated:

`கோஷ்டி இல்லாமல் நீடிக்க முடியாது..!' - காங்கிரஸிலிருந்து வெளியேறும் `ராயபுரம்' மனோ

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார் ராயபுரம் மனோ.

ராயபுரம் மனோ
ராயபுரம் மனோ

காங்கிரஸில் அணியே இருக்கக் கூடாது என நினைத்து கட்சியில் இருந்தேன். ஆனால், இங்கு அணியில்லாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டேன் என்ற ஆதங்கத்தில் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் ராயபுரம் மனோ. அப்படி என்னதான் பிரச்னை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் இணையப்போவதாகவும் தகவல் வரத்தொடங்கியுள்ளது.

குஷ்பு, கோபண்ணாவுடன் `ராயபுரம்' மனோ
குஷ்பு, கோபண்ணாவுடன் `ராயபுரம்' மனோ

தமிழக காங்கிரஸ் கட்சியில் 2003-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை காங்கிரஸ் கட்சிக்கு ஏழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அடிக்கடி மாற்றுவது ஒன்றும் அந்தக் கட்சிக்குப் புதிதல்ல. அதேபோல் திருநாவுக்கரசு, சிதம்பரம், கே.எஸ்.அழகிரி எனப் பல அணிகளாகப் பிளவுபட்டு இருக்கிறது. அத்தோடு தமிழக காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில், பல வருடங்களாகக் கட்சியில் இருந்த ராயபுரம் மனோ, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று அவரை தொடர்புகொண்டு பேசினோம்.

``காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் பல அடிமட்ட தொண்டர்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு இருக்கும் கோஷ்டி பூசல்களால் பலர் கட்சியைவிட்டே சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நானும் இருக்கிறேன். நான் தலைமையின் மீது உள்ள மனவருத்தத்தால்தான் கட்சியை விட்டே விலக முடிவெடுத்திருக்கிறேன்.

`பிரக்யா பேசுகிறார்; இந்த அவை ஏன் அமைதி காக்கிறது?' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த காங்கிரஸ்

அத்தோடு காங்கிரஸில் அணியே இருக்கக்கூடாது என நினைத்து கட்சியில் இருந்தேன். ஆனால், இங்கு அணியில்லாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டேன். இந்த வருத்தத்தில்தான் கட்சியைவிட்டு போகிறேன். நான் எந்தக் கட்சியிலும் இணையப்போவதில்லை. கொஞ்ச நாள்கள் வீட்டில் அமைதியாக இருக்கப்போகிறேன்'' என்று முடித்துக்கொண்டார்.