Published:Updated:

குஜராத்: ``ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி” - கெஜ்ரிவால் தாராளம்

அரவிந்த் கெஜ்ரிவால்

`ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் குஜராத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழுவேகத்தில் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்திருக்கிறார். துவாரகா மாவட்டத்தில் நடந்த விவசாயிகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். ``ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் விவசாயத்துக்கு 12 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டால் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

குஜராத்: ``ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி” -  கெஜ்ரிவால் தாராளம்

விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். தற்போதைய நில அளவை முறை ரத்து செய்யப்பட்டு, புதியமுறை கொண்டுவரப்படும். குஜராத்தில் முந்தைய அனைத்து அரசுகளும் விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்கவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி அவர்களின் பிரச்னையைத் தீர்க்கத் தயாராக இருக்கிறது. 10 ஆண்டுகளேயான ஆம் ஆத்மி கட்சியால் எப்படி அதிசயத்தை நிகழ்த்த முடியும் என்று கேட்கின்றனர். ஏழைகளின் ஆசீர்வாதத்தால்தான் நாங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு இலவச மின்சாரம், இலவசக் கல்வி வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். ஊழலும் ரெளடியிசமும் வேண்டுமானால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்” என்றார்.

அதோடு கிராமத் தலைவர்களையும் சந்தித்து கெஜ்ரிவால் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் குஜராத்துக்கு கெஜ்ரிவால் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொண்டுவருகிறார். ஏற்கெனவே மாதம் 300 யூனிட் மின்சாரம், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் போன்ற திட்டங்களை அறிவித்திருக்கிறார். இதே திட்டங்களை முன்வைத்துத்தான் பஞ்சாப் மற்றும் கோவா சட்டமன்றத் தேர்தல்களையும் ஆம் ஆத்மி கட்சி எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.