Election bannerElection banner
Published:Updated:

கொரோனா தந்த மாற்றம் ... கம்யூனிட்டி கிச்சனில் கைகோத்த ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட்டுகள்!

கொரோனாவால் கைகோத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள்
கொரோனாவால் கைகோத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள்

கேரளாவில் கொரோனா பரவியதுமே, அந்த மாநிலம் முழுக்க 14 மாவட்டங்களில் 1,255 கம்யூனிட்டி கிச்சன்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 2.5 லட்சம் முதல் 2.8 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

கேரளாவின் 'பீகார்' என்று கண்ணூர் மாவட்டத்தைச் சொல்வார்கள். சதா வன்முறையும், கலவரமும் வெடித்துக் கொண்டிருக்கும் பூமி இது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் - கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்டுகள்- காங்கிரஸார், ஆர்.எஸ்.எஸ் - காங்கிரஸார் மோதல் தலைவிரித்தாடும் பகுதி. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கண்ணூர் மாவட்டத்தில் இந்த கட்சிகளுக்கிடையே வன்முறையால் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

கம்யூனிட்டி கிச்சன்
கம்யூனிட்டி கிச்சன்

இந்த மாவட்டத்திலுள்ள தலசேரியில், கொரோனா காரணமாக அன்றாடங்காய்ச்சிகளுக்கு உணவு தயாரித்து வழங்க கம்யூனிட்டி கிச்சன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்யூனிட்டி கிச்சனில் உணவு தயாரிப்பதில், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கைகோத்துள்ளனர். கம்யூனிட்டி கிச்சனில் அனைவரும் வேற்றுமையை மறந்து அருகருகே அமர்ந்து உணவு தயாரிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-காரர் சாதம் வடித்தார் என்றால், கம்யூனிஸ்ட்காரர்கள் பருப்பு வேகவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, கொரோனாவுக்கு மத்தியிலும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கண்ணூர் மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தலசேரி தொகுதி எம்.எல்.ஏ ஷாம்ஷீர் கூறுகையில், ''இப்போதைய சூழலில், தலசேரி சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் யாரும் பசியுடன் வாடக்கூடாது. இது மட்டுமே எங்கள் குறிக்கோள். அதனால், எல்லோருமே கம்யூனிட்டி கிச்சனில் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம். அரசியல் பேசுவதற்கும், நான் இந்தக் கட்சி நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்ற அடையாளங்கள் எதுவுமே இப்போது தேவையே இல்லை'' என்கிறார்.

ஓ.பி.எஸ் தம்பிக்குக் கிடைக்கும் ராணுவ விமானம், ராணுவ   வீரருக்காகக் கிடைக்காதா?!

''பிரதமர் மோடி, உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிக்க உத்தரவிட்டுள்ளார். இப்போதைக்கு பசியால் வாடுபவர்கள் துயர் தீர்ப்பதே தலையாய கடமை'' என்று பாரதிய ஜனதா கட்சியின் தலசேரி மாவட்ட தலைவர் சுமேஷ் தெரிவித்துள்ளார்.

Corona
Corona

தலசேரி துணை ஆட்சியர் ஆஷிப் கே. யூசப், கம்யூனிட்டி கிச்சன் பணிகளைக் கண்காணித்துவருகிறார். கேரளாவில் கொரோனா பரவியதுமே, அந்த மாநிலம் முழுக்க 14 மாவட்டங்களில் 1,255 கம்யூனிட்டி கிச்சன்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 2.5 லட்சம் முதல் 2.8 லட்சம் வரை உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு