Published:Updated:

``மதம், கலாசாரம் எதுவாக இருந்தாலும் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே!" - மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``ஒட்டுமொத்த உலகிலும் இந்துத்துவா மட்டுமே வேற்றுமைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நம்புகிறது. இதுதான் உண்மை." - மோகன் பகவத்

``மதம், கலாசாரம் எதுவாக இருந்தாலும் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே!" - மோகன் பகவத்

``ஒட்டுமொத்த உலகிலும் இந்துத்துவா மட்டுமே வேற்றுமைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நம்புகிறது. இதுதான் உண்மை." - மோகன் பகவத்

Published:Updated:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

சமீபகாலமாகவே மதம், சாதி, பெண்ணுரிமை குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்புகூட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர், ``இந்தியாவிலிருக்கும் 99 சதவிகித முஸ்லிம்கள், தங்களின் தாய்நாட்டின் அடிப்படையில் இந்துஸ்தானிகளாக இருக்கின்றனர்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், `இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தான்' என்று கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் சங்கத் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், ``இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்கள்தான் என 1925-லிருந்து கூறிவருகிறோம். மதம், கலாசாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் , இந்தியாவைத் தங்களின் தாய் மண்ணாகக் கருதி, வேற்றுமையில் ஒற்றுமை எனும் கலாசாரத்துடன் வாழ விரும்புபவர்கள் இந்துக்களே. ஒட்டுமொத்த உலகிலும் இந்துத்துவா மட்டுமே வேற்றுமைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நம்புகிறது. இதுதான் உண்மை, இதை உறுதியாகப் பேச வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

பல வேறுபாடுகள் இருந்தபோதிலும் நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம். மேலும், ஒவ்வொருவரின் நம்பிக்கையையும், சடங்குகளையும் மதியுங்கள். அதேசமயம், உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள். ஆனால், மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் சுயநலமாக இருக்காதீர்கள்" என்று கூறினார்.