தமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்? இந்தக் கணக்கு மத்திய அரசிடமும் இல்லை, மாநில அரசிடமும் இல்லை. `அவர்களைப்போல குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்’ என்பதால், அவர்களை அழைத்துவர விமானப் பயணத்தையே ஏற்பாடு செய்கிறார்கள் தமிழக முதலாளிகள். அவர்களின் வருகைக்காக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கொங்கு மண்டலம் எனத் தொழில் நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன. ஆனால், இந்த கொரோனா காலத்தில் அந்தத் தொழிலாளர்கள்மீது காட்டப்படும் அரசின் ‘அக்கறை’ என்பது அதிர்ச்சியூட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும், அவர்களுக்குச் செலவழிக்கப்பட்டதாகக் காட்டப்படும் கணக்குகளிலும் தெளிவு இல்லை!

தமிழக வருவாய்த்துறையின்கீழ் இயங்கும் ‘பேரிடர் அபாயக் குறைப்பு முகமை’யிடம், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்பது கேள்விகளை ஆர்.டி-ஐ மூலமாக எழுப்பியிருந்தார். தமிழ்நாட்டிலுள்ள மொத்த வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கொரோனா காலத்தில் அவர்களுக்காகச் செய்த செலவினங்கள், உணவு, இருப்பிடம், போக்குவரத்து, சொந்த ஊர் செல்வதற்கான பயணச் செலவு, முகாம்கள் அமைக்கப் பட்டிருந்தால் அதன் விவரம், நிரந்தர இருப்பிடங்கள், நல வாரியங்களில் பதிவுசெய்யப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை, தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், தினக்கூலிகள் எனப் பணிபுரிவோர் எண்ணிக்கை, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிவாரணங்கள், உணவு தானியங்கள் ஆகியவை குறித்த தகவல்களைக் கேட்டிருந்தார். அந்தக் கேள்விகளை மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தது, வருவாய்த்துறை நிர்வாகம். இதையடுத்து, மாவட்டங்களிலுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் வழங்கியிருக்கும் தகவல்கள்தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``தமிழ்நாட்டில் எவ்வளவு வெளி மாநிலத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கு மத்திய அரசிடமும் இல்லை, மாநில அரசிடமும் இல்லை. `எந்த மாநிலத்திலிருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தாலும், அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்’ என்று தொழிலாளர் நலச்சட்டம் சொல்கிறது. ஆனால், எந்தவிதப் பதிவேடும் பராமரிக்கப்படுவதில்லை. மத்திய அரசு ஒரு கணக்கையும், மாநில அரசு வேறொரு கணக்கையும் சொல்கிறது” என ஆதங்கப்பட்டவர், தொடர்ந்து நம்மிடம் பேசினார்.

``கொரோனா பரவத் தொடங்கி, லாக்டௌன் நீட்டிக்கப்பட்டபோதுதான் வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள், விவரிக்க முடியாத அளவுக்குப் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள். பெரும்பான்மையானவர்கள் நடந்தே சென்றது இந்த நூற்றாண்டின் கொடும் அவலம். குடும்பம் குடும்பமாக ரயில்வே ட்ராக்குகளில் படுத்துறங்கி, ரயில்களில் அடிபட்டு இறந்தவர்கள் ஏராளம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர், 97 பேர் ரயில்வே ட்ராக்குகளில் இறந்ததாகத் தெரிவித்தார். மே 28 வரையில் மொத்தமாக 238 தொழிலாளிகள் இறந்ததாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதேநேரம், `வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை’ என்றார். `புள்ளிவிவரங்களே இல்லையென்றால், கொரோனா காலத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போய்ச் சேர்ந்தது?’ என்பதுதான் என்னுடைய கேள்வி” என்று கோபத்தோடு, கையிலிருந்த தகவல்களைக் காட்டினார்.

ஆர்.டி.ஐ மூலம் மாவட்டங்களிலிருந்து வந்த தகவல்கள் இவை: `மத்திய அரசின் `பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலனுக்காக 04.06.2020 அன்று தமிழகத்துக்கு ரூ.39,74,50,000 ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து, 17.6.20 அன்று ரூ.43,77,70,000 ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக, 83,52,20,000 ரூபாய் தமிழகத்துக்கு வந்திருக்கிறது. (ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில் இந்தக் கூட்டுத்தொகை 85,52,20,000 என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) இந்தத் தொகை, 4,23,644 வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காகச் செலவிடப் பட்டிருக்கிறது. (ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில் எண்ணிக்கை 4,23,647 என்று தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது) அதாவது, அவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்லவும், அவர்களின் உணவு உள்ளிட்ட விஷயங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத் தொழிலாளர்கள் 1,35,516 பேர், உ.பி-65,065, ஜார்க்கண்ட்-47,917, ஒடிசா-58,237, அஸ்ஸாம்-27,006, மே.வங்கம்-46,769, ஆந்திரா-1,391, நாகலாந்து-1,600, மணிப்பூர்-4,466, மிசோரம்-1,412, திரிபுரா-4,732, ம.பி-5,662, ராஜஸ்தான்-3,007, ஜம்மு/இமாச்சல்-1,554, டெல்லி-960, சத்தீஸ்கர்-2,637, மகாராஷ்டிரா-1,063, கர்நாடகா-1,350, கேரளா-704, இதர மாநிலங்கள்-12,596 என்ற எண்ணிக்கையில் தமிழகத்திலிருந்து சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில், தொழிலாளர்கள் எந்தெந்த மாவட்டங்களிலிருந்து அனுப்பிவைக்கப் பட்டார்கள் என்ற தகவல்கள் இல்லை.

``காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற இடங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். இங்கு நிறுவனத்துக்குள்ளேயே தொழிலாளர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். ஆனால், காஞ்சியிலிருந்து சரியான தகவல் வரவில்லை. தொழிலாளர்களின் விவரங்களைக் கொடுப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை. ஈரோடு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் 741 பேர். ஆனால், சாயப்பட்டறைகளில் பல்லாயிரக் கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அதேபோல், விழுப்புரத்தில் கட்டுமானத் தொழிலிலுள்ளவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள். இவர்களைப் பற்றிய கணக்குகளும் இல்லை. தவிர, ஓட்டல்களில் வேலை பார்ப்பவர்கள் எவ்வளவு பேர் என்பது கடை நிறுவனச் சட்டப்படி பதிவுசெய்யப்படவில்லை.

அரசாங்கம் சொல்லும் கணக்கு என்பது தவறானது. கொரோனா காலத்தில், ஊருக்குச் செல்லும் பதற்றத்தில் மாவட்ட நிர்வாகங்களைத் தேடி வந்தவர்களை ரயில் மற்றும் பேருந்துகளில் அனுப்பிவைத்தனர். அவர்களை மட்டுமே இவர்கள் கணக்கில் வைத்திருக்கிறார்கள். என்னுடைய ஒன்பது கேள்விகளில், பணம் செலவு செய்ததைத் தவிர வேறு எந்தத் தகவலும் வரவில்லை. உணவுச் செலவுக்கு எந்தவிதக் கணக்கும் இல்லை. அவர்களை யார் எண்ணிப் பார்க்கப் போகிறார்கள்... நாடாளுமன்றத்திலேயே கணக்கு இல்லாதபோது, மாவட்டங்களில் மட்டும் கணக்கு இருக்குமா என்ன... புள்ளிவிவரங்கள் இல்லாமல், பதிவுகளே இல்லாமல் அவர்களைக் காப்பது என்பது முடியாத காரியம். எனவே, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சட்டத்தை அரசு உடனே அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கான அடையாள அட்டை, தங்கும் முகாம்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். மீண்டும் தமிழ்நாட்டுக்குள் வரக்கூடிய தொழிலாளர்களை விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றிலேயே முகாம் அமைத்து, கணக்கெடுக்க வேண்டும். இதைச் சரியாகச் செய்யாவிட்டால், அடுத்தமுறை பிரச்னை வந்தால் அரசிடம் எந்தத் தகவலும் இருக்கப்போவதில்லை” கிருஷ்ணமூர்த்தியின் குரலில் அவ்வளவு வெப்பம்!

இது குறித்து, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம், ``தமிழ்நாட்டில் பதிவுபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களும், பதிவுசெய்யாத தொழிலாளர்களும் இருக்கிறார்கள். பொதுவாக, கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பதிவுசெய்திருக்க மாட்டார்கள். தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் பதிவுசெய்திருப்பார்கள். எண்ணிக்கையில் சற்று வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம். தொழிலாளர் நலத்துறையில் இதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. இதில், கொரோனா காலத்தில் சொந்த ஊருக்குச் செல்லாத வெளிமாநிலத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். முதல்வரும், `வெளிமாநிலத் தொழிலாளர் களைப் பணியில் அமர்த்தியிருக்கும் நிறுவனங்கள், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினாலும் அரசே செய்துதரும்’ என்றார். அதுபோலவே, தொழிற்சாலைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்தது. அந்த வகையில்தான் கணக்குகள் வெளிவந்திருக்கின்றன” என்றார்.

இன்னும்கூட தொழிலாளர்கள் இடம்பெயர்வது அதிகரித்தபடியேதான் இருக்கிறது. தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துவிட்ட துயரத்தில், எங்கே பிழைப்புக்கு வழி இருக்கிறதோ அங்கே நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சி, குறு, சிறு நடுத்தரத் தொழில்களின் நசிவு, இயல்புக்குத் திரும்பாத தொற்றுச் சூழலில் எழ முடியாமல் வீழ்ந்துகிடக்கும் இந்த எளிய மனிதர்களின்மீது உண்மையிலேயே அரசுக்கு அக்கறை இருக்கிறதா?

மனசாட்சியோடு சொல்லுங்கள்!