Published:Updated:

`வசந்தகுமார் அளித்த வாக்குறுதி!’ - நாங்குநேரி வேட்பாளராக ரூபி மனோகரன் தேர்வானது எப்படி?

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகக் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

நாங்குநேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? -
அறிவிப்புக்கு முன்பாகக் கிளம்பிய எதிர்ப்பு!

பண பலமும் கட்சி செல்வாக்கும் மிகுந்த வெளியூர் நபர்களுக்கு சீட் கொடுக்காமல், கட்சிக்காக உழைத்த உள்ளூர் நபர்களுக்கே சீட் ஒதுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாகக் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பலரும், `பண வசதி படைத்தவர்களுக்குத் தொகுதியை ஒதுக்காமல் உள்ளூர் வேட்பாளர்களுக்குத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பளிக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில்தான், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். 60 வயது நிரம்பிய அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவரான மனோகரன், சென்னையில் கட்டுமானத் தொழில் செய்துவருகிறார்.

Ruby Manoharan
Ruby Manoharan

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட, கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன், தொழிலதிபர் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் சீட் கேட்டனர். ஆனால், அவர்களுக்குக் கொடுக்காமல் தொழிலதிபரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரூபி மனோகரனுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ``குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரூபி மனோகரன், சென்னையில் தொழில் செய்துவருகிறார். கடந்த எம்.பி தேர்தலின்போது குமரி தொகுதியில் போட்டியிட அவர் சீட் கேட்டார். ஆனால், அவருக்குப் பதிலாக ஹெச்.வசந்தகுமாருக்கு சீட் ஒதுக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

60 பேர் போட்டி;ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஜாக்பாட்!-நாங்குநேரி அ.தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி
congress candidate Ruby Manoharan
congress candidate Ruby Manoharan

ரூபி மனோகரன், ஹெச்.வசந்தகுமாரின் நெருங்கிய உறவினர். அதன் காரணமாகவே நாங்குநேரி தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுதிக்கு நிறைய நல்லவற்றைச் செய்துள்ள வசந்தகுமார், தீவிர பிரசாரம் செய்து வெற்றியைக் கைப்பற்றிக் கொடுப்பதாகக் கட்சி மேலிடத்துக்கு அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் ரூபி மனோகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு