Published:Updated:

ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால்... இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்?

ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால்...
பிரீமியம் ஸ்டோரி
ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால்...

இந்தியா தனது மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, பெருமளவு நம்பியிருப்பது நிலக்கரியைத்தான்.

ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால்... இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்?

இந்தியா தனது மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, பெருமளவு நம்பியிருப்பது நிலக்கரியைத்தான்.

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால்...
பிரீமியம் ஸ்டோரி
ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால்...

`எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா, உக்ரைன்மீது போர் தொடுக்கலாம்’ என்பதைத்தான் அங்கிருந்து வந்துகொண்டிருக்கும் செய்திகள் சொல்கின்றன. ரஷ்ய நாட்டுத் தளபதிகள் உக்ரைன் எல்லையில், தங்கள் நாட்டுப் படை, பரிவாரங்களுடன் அதிபர் புதினின் கட்டளைக்காகக் கண்விழித்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். உக்ரைனிலிருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படைகள், உக்ரைனின் எல்லையோரப் பகுதிகளில் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டார்கள். அதனால், அங்கு போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால், இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள்!

உக்ரைனில் 20,000-க்கும் அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் வேலை நிமித்தமாகவும், பலர் படிப்புக்காகவும் உக்ரைனில் வசித்துவருகிறார்கள். இந்திய மாணவர்களில் மருத்துவம் படிக்க, பலரும் தேர்வுசெய்யும் நாடுகளில் உக்ரைன் முக்கிய இடத்தில் இருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கிவிட்டால், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மீட்டெடுப்பதுதான் இந்தியாவுக்கு முதல் சவால். போருக்குப் பின்னர் உக்ரைன் எந்த நிலைமைக்குச் செல்லும் என்பது தெரியாது. எனவே, அங்கு படித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படலாம்!

ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால்... இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்?

நிலக்கரி, கச்சா எண்ணெய்!

இந்தியா தனது மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, பெருமளவு நம்பியிருப்பது நிலக்கரியைத்தான். வெளியிலிருந்து இறக்குமதி செய்யும் மொத்த நிலக்கரியில் ரஷ்யாவிடமிருந்து ஆண்டுதோறும் சுமார் 1.5% அளவு நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த 2021-ம் ஆண்டில், 1.8 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருந்தது. ஏற்கெனவே நிலக்கரித் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், ரஷ்யாவில் போர் நடந்தால் இந்தியாவின் நிலக்கரித் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது!

2021-ல் ரஷ்யாவிலிருந்து 43,400 பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருக்கிறது இந்தியா. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1% மட்டுமே. அதேபோல, ஆண்டுக்கு 0.2% அளவிலான இயற்கை எரிவாயுவையும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கிவருகிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இரண்டையும் மிகக் குறைந்த அளவிலேயே ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெறுவதால், இந்த விஷயங்களில் இந்தியா எளிதாகச் சமாளித்துக்கொள்ள முடியும் எனச் சொல்லப்படுகிறது.

மறைமுகப் பிரச்னைகள்!

நேரடிப் பிரச்னைகள் போக, சில மறைமுகப் பிரச்னைகளையும் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்தியா எதிர்கொள்ளவேண்டியிருக்கும். தற்போதுவரை இந்த விவகாரத்தில் பொதுவான கருத்துகளை மட்டுமே இந்தியா பதிவுசெய்துவருகிறது. ஒருவேளை போர் நடந்தால், உக்ரைனுக்கு எதிராக இருக்கும் ரஷ்யாவின் பக்கமோ, உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காவின் பக்கமோ நிற்கவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும். போர் விவகாரத்தில், எந்த நாடு செய்தது சரி என்பதை ஐ.நா-வில் பதிவுசெய்யவேண்டிய நிலை ஏற்படும். ரஷ்யா, அமெரிக்கா என இரு நாடுகளுடனும் நட்புறவிலிருக்கும் இந்தியா, ஏதாவது ஒரு நாட்டின் பக்கம் நின்றால், இன்னொரு நாட்டின் பகையைச் சம்பாதிக்க நேரிடும்.

2016-ம் ஆண்டுக்குப் பிறகு, ரஷ்யாவுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது இந்தியா. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்களில், சுமார் 50 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவைதான். குறிப்பாக, இந்திய விமானப்படையிலிருக்கும் போர் விமானங்களில், 70 சதவிகித விமானங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை அல்லது ரஷ்யாவின் உதவியோடு தயாரிக்கப்பட்டவை. மறுபுறம், சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய QUAD அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது இந்தியா. சீனாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவின் உதவி இந்தியாவுக்கு அவசியப்படுகிறது. எனவே, இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாட்டைப் பகைத்துக்கொண்டாலும் இந்தியாவுக்குச் சிக்கல்தான்!

ரஷ்யா - உக்ரைன் போர் நடந்தால்... இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்?

சீனாவுக்கு லாபம்!

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், `உக்ரைன்மீது போர் தொடுத்தால், ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதிப்போம்!’ என்றிருக்கின்றன. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடை விதிக்கும் பட்சத்தில், ரஷ்யா இயல்பாகவே சீனாவின் உதவியை நாடிச்செல்லும் வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவைப் பொது எதிரியாகக் கருதும் சீனாவும் ரஷ்யாவும் ஒன்று சேர்ந்தால் இந்தியா, அமெரிக்கா என இரு நாடுகளுக்கும் அது தலைவலியாகவே அமையும். அதுமட்டுமல்லாமல், சீனா மீது மட்டுமே அதிக கவனம் செலுத்திவந்த அமெரிக்கா, ரஷ்யாமீது அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். அப்படியான சூழல் அமைந்தால், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த தொடங்கப்பட்ட QUAD அமைப்பு நீர்த்துப்போகும். சீனாவுக்கு இது சாதகமாகவே அமையும்.

``ரஷ்யா - சீனா நட்புறவு வலுப்பெற்றால், பெருமளவு ரஷ்யாவின் பாதுகாப்புத் தளவாடங்களைப் பயன்படுத்திவரும் இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறிய அளவிலாவது அச்சுறுத்தல் ஏற்படலாம்’’ என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். இந்தப் பிரச்னைகளையெல்லாம் எப்படிச் சமாளிக்கப்போகிறது இந்தியா?