`நழுவும் ரஜினி... கலக்கும் கமல்... பி.ஜே.பி-யின் விருது தூண்டில்!’ என்ற தலைப்பிட்ட ஜூ.வி. கவர்ஸ்டோரி, நவம்பர் 6-ம் தேதியன்று வெளியான இதழில் இடம்பெற்றது. ‘ரஜினியும் கமலும் இணைந்து தமிழக அரசியலில் பயணம் செய்யவிருக்கிறார்கள்’ என்பதுதான் கட்டுரையின் சாராம்சம். கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து ரஜினி மற்றும் கமல் இருதரப்பின் அடிமட்ட ரசிகர்கள் தொடங்கி, பெருந்தலைகள் வரை இதையே விவாதப்பொருளாக்கினர். தமிழக அரசியல் கட்சியினரிடையேயும் இது பெரும்பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில், நவம்பர் 17 அன்று சென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இதே விஷயத்தை மேடையில் பேசிவைக்க, மேலும் சூடு கிளம்பிவிட்டது. இந்தப் பரபரப்பான சூழலில் எஸ்.ஏ.சந்திரசேகரைச் சந்தித்தோம்.

‘‘ `தேவை ஏற்பட்டால் அரசியலில் இணைவோம்’ என்று ரஜினியும் கமலும் தெரிவித்திருக்கிறார்களே?”

‘‘நான் பேசுவதற்காக வைத்திருந்த நோட்ஸ் வேறு. மேடை ஏறியவுடன் விழாவின் பிரமாண்டம் எனக்கு வேறுவிதமான உணர்வைக் கொடுத்தது. ரஜினியும் கமலும் ஒன்றாக அமர்ந்து இருந்ததை மேடையில் இருந்து பார்த்தேன். மாஸும் க்ளாஸும் இணைந்திருந்ததைப் பார்த்ததுமே, இவர்கள் அரசியலிலும் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. மனதில் தோன்றியதையெல்லாம் மறைக்காமல் கொட்டிவிட்டேன்.’’

“புதியவர்களுக்கு, நீண்டகாலமாக அரசியலில் இருந்தவர்கள் வழிவிட வேண்டும் என்று பேசியிருந்தீர்களே?”

‘‘ஆமாம். அதில் என்ன தவறு? குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அப்பா தன் மகனிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதில்லையா? அப்படித்தான் `சில ஆண்டுகளுக்குப் பிறகு பொறுப்புகளை, அதிகாரத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும்’ என்று சொன்னேன். புதியவர்களால் இன்னும் பல புதுமைகளை, நன்மைகளை மக்களுக்குக் கொடுக்க முடியும்.’’

‘‘விஜய்யை மனதில் வைத்துதான் அப்படிப் பேசினீர்களா?”

‘‘மேடையில் நான் எங்கேயாவது `விஜய்’ என்ற பெயரை உச்சரித்தேனா? விஷால்கூடத்தான் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார். நீட் குறித்துப் பேசியதால், ஒரு நடிகர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்படி பலர் இருக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.’’

‘‘ரஜினியோ ஆன்மிகவாதி. நீங்களோ புரட்சிகரமான படங்களை இயக்கியவர். அவரோடு இணையும்போது முரண்பட வாய்ப்புகள் உள்ளனவே?’’

‘‘ஆன்மிகம் என்பதே மனதை ஒருநிலைப்படுத்துவதுதானே! லஞ்சம், ஊழல் என நிறைய கெடுதல்களை நம் மக்கள் பார்த்து விட்டார்கள். அதனால், தகுதியுள்ளவர்கள் வர வேண்டும். ஆன்மிகவாதி ரஜினி அரசியலுக்கு வந்தால், ஆன்மிகத்துக்குக் கட்டுப்பட்டு நல்லது செய்வாரே!’’

‘‘அப்படியென்றால் தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகள் ஊழல் ஆட்சி செய்தன, செய்கின்றன என்று கூறுகிறீர்களா?”

‘‘இப்படியெல்லாம் கேட்கக் கூடாது. எனக்குப் பிடித்த தலைவர் கலைஞர் கருணாநிதி என்பது எப்போதும் மாறாது. வெற்றிடம் இருக்கிறதா இல்லையா என்று நான் பட்டிமன்றம் நடத்தவில்லை. ரஜினி, கமலுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நல்லாட்சி தருவார்கள் என நம்புகிறேன்.’’

“வெற்றிடம் பற்றிய ரஜினியின் கருத்துக்கு முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்களே?”

‘‘அதுதான் எனக்குப் புரியவில்லை. ரஜினியால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தால் ஏன் அவரைப் பற்றிப் பேச வேண்டும்? பேசுகிறார்கள் என்றால், மனதுக்குள் அவரைப் பற்றி ஓடிக்கொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்!’’

“ `ரஜினி-கமல் இணைந்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளாரே!’’

‘‘அது அவருடைய கருத்து. யார் முதல்வர் என்று அவர்கள் முடிவுசெய்துகொள்வார்கள். ஏனெனில், அரசியல் என்பது கடினமான பாதை. அதில் நிறைய சங்கடங்கள் இருக்கின்றன. ரஜினியும் கமலும் நிறைய கஷ்டப்படவேண்டும். தடைகளைக் கடந்துதான் வரவேண்டும். நீயா... நானா என்று போட்டியிருந்தால் அரசியலில் ஜெயிக்க முடியாது. அவர்கள் ஒற்றுமையோடு இருப்பார்கள் என நம்புகிறேன்.’’

“அந்தப் பயணத்தில் எஸ்.ஏ.சி-க்கு என்ன பதவி?”
.Icon Of Golden Jubilee விருது விழாவில் ரஜினியுடன் விஜய்! ஆனந்த விகடன் விருது மேடையில் என்ன நடந்தது?.
‘‘1980-களில் பதவிகள் என்னைத் தேடி வந்தபோதே மறுத்தவன் நான். எந்தப் பதவிக்காகவும் நான் அவர்களை ஆதரிக்கவில்லை. அவர்கள் இணைந்து பயணிக்கும்போது நான் பின்னால் இருப்பேன். அவ்வளவே!’’

‘‘ரஜினி ஒரு தமிழனா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே!’’

‘‘தமிழ்நாட்டுக்காக உழைக்கிறேன் என்று சொல்லும் அனைவரும் தமிழன்தான். ரஜினி தமிழ்நாட்டுக்காக உழைப்பவர்.’’

“உங்கள் நீண்டகால நண்பர் விஜயகாந்த் பற்றி?”

‘‘விஜயகாந்த் இப்போது பழையபடி இருந்திருந்தால், அவர்தான் சி.எம் என்று ஆளுங்கட்சி அமைச்சரே சொன்னார். அந்தளவுக்கு ஆளுமை உள்ளவர். நிச்சயம் அவர் உடல்நிலை மீண்டு வருவார்.’’

“மேடைகளில் விஜய் அரசியல் கருத்துகளைப் பேசினால், அமைச்சர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வருகின்றனவே?”

‘‘விஜய் பேசுவதை அரசியல் கருத்து என்று சொல்வதைவிட சமூகக் கருத்து என்று சொல்லுங்கள். சிறுவயதிலிருந்தே அவருக்குள் சமூகக் கருத்துகள் உண்டு. எங்கும் அநீதி நடக்கக் கூடாது என விரும்புபவர். அந்த உணர்வுதான் ‘பிகில்’ மேடையிலும் எதிரொலித்தது. அமைச்சர்கள் எதிர்வினையாற்றுவது ஏன் என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும்.’’

“அரசியலுக்கு வருவதற்கான தகுதிகள் விஜய்க்கு இருப்பதாக நினைக்கிறீர்களா?”

‘‘நிச்சயமாக. அரசியலுக்கு வருவதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கின்றன.’’

‘‘அவர் அரசியலுக்கு வருவாரா?’’

‘‘இதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.’’