Published:Updated:

``சுயேச்சையாகப் போட்டியிட்டாலும், அவர் கட்சி கேண்டிடேட் இல்ல..!" - முட்டிமோதும் சேலம் அதிமுக-வினர்

சேலம்

அ.தி.மு.க., வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல் சுயேச்சையாக நிற்பது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``சுயேச்சையாகப் போட்டியிட்டாலும், அவர் கட்சி கேண்டிடேட் இல்ல..!" - முட்டிமோதும் சேலம் அதிமுக-வினர்

அ.தி.மு.க., வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல் சுயேச்சையாக நிற்பது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சேலம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற ஜூலை 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு ஒன்றியத்தில் மட்டும் இந்தத் தேர்தலானது நடைபெறவுள்ளது. சேலம், ஆண்டிப்பட்டி ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வையாபுரி. இவர் சமீபத்தில் இறந்ததால், தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில், அ.தி.மு.க., தரப்பிலிருந்து வெங்கடேஷ் என்பரும், தி.மு.க., தரப்பிலிருந்து முருகன் என்பவரும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., தரப்பிலிருந்து போட்டியிடக்கூடிய வெங்கடேஷ் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடாமல், சுயேச்சையாக தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். எதிர்த்து நிற்கும் தி.மு.க., வேட்பாளர் முருகன் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கியிருக்கிறார். சேலம் மாவட்டத்தில் நடக்கக்கூடிய ஒரே ஒரு தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல் சுயேச்சையாக நிற்பது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வெங்கடேஷ்
வெங்கடேஷ்

இது தொடர்பாக அ.தி.மு.க-வின் சுயேச்சை வேட்பாளர் வெங்கடேஷிடம் பேசினோம். ``கட்சியில் அனுமதி வாங்கித்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். கட்சி சீனியர்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். தற்போது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்னையினால் இரட்டை இலைச் சின்னம் வழங்கப்படாமல் போனது. அதனால்தான் சுயேச்சையாக நிற்கிறேன். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கண்டிப்பாக வெற்றிபெறுவேன்" என்றார்.

முருகன்
முருகன்

சின்னம் வழங்கப்படாதது குறித்து சேலத்தில் உள்ள அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். ``வெங்கடேஷ் அடிக்கடி கட்சி தாவிக்கொண்டேயிருப்பாரு. இப்பகூட மூணு மாசத்துக்கு முன்ன அ.ம.மு.க-ல இருந்து அ.தி.மு.க-வுல சேர்ந்தாரு. வந்த உடனே கட்சியில வேட்பாளராக அறிவிக்கமாட்டாங்க. அவர் எதோ காசு இருக்குணு நிக்குறாரு, கட்சித் தலைமைலாம் ஒண்ணும் நிற்கச் சொல்லல. பொதுவா கட்சித் தலைமை ஒரு கேண்டிடேட்ட அறிவிச்சா முறைபடி அறிக்கை வெளிவரும். ஆனா அதுமாதிரி இவருக்கு வரல. அதனாலதான் கட்சி சீனியர்கள் யாரும் இவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்கப் போகல" என்றனர்.