Published:Updated:

தி.மு.க-வுக்கு மணல் குவாரிகள்? - சி.வி.சண்முகத்தை சீண்டும் சிவகங்கை போஸ்டர்

சர்ச்சை சுவரொட்டி
சர்ச்சை சுவரொட்டி

மணல் அள்ளுவதற்குக் கட்சி பேதமில்லாமல் தி.மு.க-வுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி கொடுத்ததாக நன்றி தெரிவிக்கும் போஸ்டர் ஒன்று சிவகங்கையில் வலம் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க - அ.தி.மு.க கூட்டாக மணல்கொள்ளையில் ஈடுபடுகிறது என மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய சுவரொட்டியால் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி புதிய வார்டுகள் அமைக்கும் அளவுக்குத் தொற்று அதிகரித்துள்ளது. ஆனால், ஊரடங்கு ஒரு பக்கம் இருந்தாலும் மணல் கொள்ளை படுவேகத்தில் நடைபெற்றுவருகிறது.

கொரோனா
கொரோனா

இந்நிலையில், மணல் அள்ளுவதற்குக் கட்சி பேதமில்லாமல் தி.மு.க-வுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி கொடுத்ததாக நன்றி தெரிவிக்கும் போஸ்டர் ஒன்று சிவகங்கையில் வலம் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`போலீஸ் ஏட்டு துணையோடு மணல் கொள்ளை?’- தடுக்க முயன்ற ஒரத்தநாடு விவசாயியிக்கு நேர்ந்த கொடுமை

அந்தச் சுவரொட்டியில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

போஸ்டர்
போஸ்டர்

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தில்நாதனிடம் கேட்டோம். "குறிப்பிட்ட போஸ்டரில் தேவகோட்டை என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவகோட்டை பகுதியில் இந்த போஸ்டர் ஒட்டப்படவில்லை. வேறு எங்கேயோ ஒட்டப்பட்டுள்ளது. எனக்கும் வாட்ஸ்அப்பில் வந்தது. இதை யார் ஒட்டினார்கள், எங்கு ஒட்டினார்கள் என்பது தெரியவில்லை. யாரோ விஷமிகள் இதைச் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கிறேன்" என்றார்.

சுவரொட்டி குறித்து, தேவகோட்டை தி.மு.க நகரச் செயலாளர் பாலா, ``திருப்பத்தூர் வார சந்தைப் பகுதியில் ஒரே ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. வேறு எங்கேயும் இல்லை. தி.மு.க-வின் பெயரையும் பெரியகருப்பன் அவர்களின் பெயரையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது. ஏன் என்றால் உள்ளூர் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பெயரையும் மாவட்டச் செயலாளர் பெயரையும் குறிப்பிடாமல் சம்பந்தம் இல்லாமல் சி.வி.சண்முகம் அவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆசியோடு நடக்கிறதா மணல் கொள்ளை?

இதனால் குழப்பத்தை ஏற்படுத்த இப்படி யாரோ செய்துள்ளனர். சிவகங்கையில் மணல் கொள்ளை நடைபெறுவது உண்மை. ஆனால் தி.மு.க-வுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் தி.மு.க தரப்பினர் இப்படி ஒரு போஸ்டரை ஒட்ட வாய்ப்பில்லை. எனவே, இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு