Published:Updated:

கரூர்:`விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் பா.ஜ.க அடகுவைத்துவிட்டது!' - காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் தத்

சஞ்சய் தத்
சஞ்சய் தத் ( நா.ராஜமுருகன் )

வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 234 இடங்களையும் வெல்லும். வேலைவாய்ப்பு, கல்வி, இட ஒதுக்கீடு என்று தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் பி.ஜே.பி-க்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு அடிமையாக இருக்கிறது.

``விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். இலவச மின்சாரத்தை ரத்து செய்யச் சொல்லி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது" என்று சஞ்சய் தத் குற்றம்சாட்டியிருக்கிறார்.

 சஞ்சய் தத் பேசியபோது..
சஞ்சய் தத் பேசியபோது..
நா.ராஜமுருகன்
``குஷ்பு மாதிரியானவங்களுக்கு பா.ஜ.க ஏற்றதில்லை!" - ஜோதிமணி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான சஞ்சய் தத், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,

``மத்தியில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக ஆட்சியிலுள்ள நரேந்திர மோடி அரசாங்கம் மக்களைத் துன்புறுத்திவருகிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்று மக்களைச் சித்ரவதை செய்த மோடி அரசு கல்வி, இட ஒதுக்கீடு, விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் என்று எழுபது ஆண்டுக்காலமாக காங்கிரஸ் அரசுகள் உருவாக்கிய கட்டுமானங்களைத் தகர்த்துவருகிறது. பொருளாதாரம் அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா தொற்றில் மக்கள் செத்து மடியும்போதும், சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும்போதும் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. `கைதட்டுங்கள்’, `விளக்கைப் போடுங்கள்’, `அணையுங்கள்...’ என்று சொன்னது தவிர, உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்
நா.ராஜமுருகன்

இது போதாதென்று விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம்வைத்துவிட்டார்கள். இலவச மின்சாரத்தை ரத்து செய்யச் சொல்லி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்திவருகிறது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு குறைந்தபட்சம் ஐயாயிரம் கையெழுதுகள் பெறப்படும். ஆரோக்கிய சேது செயலியை கொரொனாவைத் தடுப்பதற்காக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மோடி அரசு மக்களைக் கட்டாயப்படுத்தியது. அப்போதே தலைவர் ராகுல் காந்தி, `இது சந்தேகத்துக்குரிய செயலி, இதனால் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சமரசம் செய்யப்படும்' என்று எச்சரித்தார். இப்போது அந்தச் செயலியை யார் உருவாக்கியது என்றே தெரியவில்லை என்று சொல்கிறது அரசு. இந்த அரசா மக்களைக் காப்பாற்றப் போகிறது?.

நாடெங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்கள் கொடும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆனால், பி.ஜே.பி அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிப்பதற்கு பதிலாக, குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது. ஹத்ராஸில் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் உடல், பெற்றோர்களுக்குக்கூடத் தெரியாமல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடுமைகளைத்தான் மோடி அரசின் கீழ் நமது சகோதரிகள் அனுபவித்துவருகிறார்கள். ஒரு 62 வயது விதவைப் பெண்ணின் வீட்டின் முன் சென்று சிறுநீர் கழித்து, அவரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட பி.ஜே.பி-யின் சண்முக சுப்பையாவை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் உறுப்பினராக்கியிருக்கிறது மத்திய அரசு. இது மாதிரியான இழிசெயல்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள்தான் பி.ஜே.பி-யில் பதவியைப் பெற ஒரே தகுதியாக இருக்கிறது. இதைவிட, ஒரு அரசு மோசமாக நடந்துகொள்ளவே முடியாது.

சஞ்சய் தத் பேசியபோது..
சஞ்சய் தத் பேசியபோது..
நா.ராஜமுருகன்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பான வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, கரூரில் நமது காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவர், மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டிருப்பது, நமக்கெல்லாம் பெருமை. அதேபோல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 234 இடங்களையும் வெல்லும். வேலைவாய்ப்பு, கல்வி, இட ஒதுக்கீடு என்று தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் பி.ஜே.பி-க்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு அடிமையாக இருக்கிறது. தமிழகத்தை அழிக்க நினைக்கும் பி.ஜே.பி-க்கு துணை நிற்கிறது’’ என்றார் அதிரடியாக!.

அடுத்த கட்டுரைக்கு