Published:Updated:

`சிவசேனா கூட்டணி அரசை கலைத்துப் பாருங்கள் பார்க்கலாம்!' - எம்.பி சஞ்சய் ராவத் சவால்

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசைக் கலைத்துப்பாருங்கள் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் சவால் விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை மகாராஷ்டிரா போலீஸார் திடீரெனக் கைதுசெய்தது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அமைச்சரைக் கைதுசெய்ததால், மகாராஷ்டிராவிலுள்ள சிவசேனா கூட்டணி அரசை மத்திய அரசு கலைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இதனால் சிவசேனா கடும் கோபமடைந்திருக்கிறது. எதிர்காலத்தில் பாஜக-வுடன் சிவசேனா கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய நிகழ்வுகள் அதற்கு மாறாக அமைந்துள்ளன. இது குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ``மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது சம்பவத்தை ஒரு நாடகம் என்றும், மாநிலம் முழுவதும் சிவசேனாவினர் நடத்திய போராட்டம் மாநில அரசால் உருவாக்கப்பட்டது என்றும் பாஜக-வினர் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வேண்டுமென்றே மத்திய ஏஜென்சிகளைக் கொண்டு பாஜக, அரசுகளைக் கவிழ்க்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் அப்படிச் செய்து பாருங்கள் பார்க்கலாம். அனில் தேஷ்முக், பிரதீப் சர்நாயக் விவகாரத்தில் என்ன நடந்தது... இவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே சிபிஐ-யை பாஜக பயன்படுத்தவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

நாராயண் ராணே தனது யாத்திரையில் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவை ஜனநாயக முறையில் விமர்சனம் செய்வேன் என்று தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டதற்கு, ``சிவசேனாவை மிரட்டுபவர்களுக்கு நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம்” என்றார். உத்தரப்பிரதேசத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்துக் கேட்டதற்கு, ``இது ஆரு ஆண்டுக்கு முந்தைய பிரச்னை. இப்போதுதான் இதில் விழித்துக்கொண்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிரா: `அதிரடி கைது... ஜாமீன்’ - நீதிமன்ற உத்தரவால் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட மத்திய அமைச்சர்

தொடர்ந்து, ``மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள், `மேற்கு வங்கம் போன்று மகாராஷ்டிரா மாற அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறுகிறார்கள். மேற்கு வங்கம் இந்தியாவின் ஒரு பகுதி. மகாராஷ்டிராவை மேற்கு வங்கமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? மேற்கு வங்கத்தில் அவர்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனரோ அதே போன்று எதிர்காலத்தில் மகாராஷ்டிராவிலும் தோற்கடிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு