Published:Updated:

``ஆன்லைன் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு... அறிவில்லாமல் அதை விளையாட முடியாது" - சரத்குமார்

சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம்
News
சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம்

``தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 34 ஆண்டுகள் மதுவிலக்கு இங்குதானே அமலில் இருந்தது... அப்போது பொருளாதாரத்துக்கு என்ன செய்தார்களோ அதை இப்போது செய்ய வேண்டும்." - சரத்குமார்

``ஆன்லைன் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு... அறிவில்லாமல் அதை விளையாட முடியாது" - சரத்குமார்

``தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 34 ஆண்டுகள் மதுவிலக்கு இங்குதானே அமலில் இருந்தது... அப்போது பொருளாதாரத்துக்கு என்ன செய்தார்களோ அதை இப்போது செய்ய வேண்டும்." - சரத்குமார்

Published:Updated:
சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம்
News
சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் எழும்பூரில் பூரண மதுவிலக்கு கோரி இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சரத்குமார், "பூரண மதுவிலக்கு சாத்தியமா, இல்லையா என்பதைத் கடந்து, தற்போது அது அவசியமாகியிருக்கிறது. போதைப்பொருள்தான் அனைத்துக் குற்றங்களுக்கும் காரணம். 75 சதவிகித விபத்துக்கான காரணம் போதை எனக் கூறப்படுகிறது.

உண்ணாவிரத போராட்டம்
உண்ணாவிரத போராட்டம்

அதிக இளைஞர்கள் உள்ள இந்தியாவின் மனித வளத்தைப் பேணி பாதுகாத்தால்தான், வருங்காலத்தில் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். இதற்கென தனியாக காவல்துறையில் ஒரு குழுவை உருவாக்கி, கண்காணிக்க வேண்டும். மதுவின் மூலம் ரூ.36,000 கோடி வருமானம் வருகிறது. அதனால் இதை உடனடியாகத் தடை செய்ய முடியாது எனக் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 34 ஆண்டுகள் மதுவிலக்கு இங்குதானே அமலில் இருந்தது... அப்போது பொருளாதாரத்துக்கு என்ன செய்தார்களோ அதை இப்போது செய்ய வேண்டும்.

மது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் எனக் கூறவில்லை. தயாரிக்கப்படும் மதுவை ஏற்றுமதி செய்யலாமே... ஐடி நிறுவனங்கள் வந்த பிறகு மேலைநாட்டு கலாசாரம் மூலம் மது கௌரவமாகக் கருதப்படுகிறது. மது நிறுவனங்களை அரசு நடத்துவதை விடுத்து, மணல், கிரானைட் போன்றவற்றை எடுத்து நடத்தலாம்” என்றவர், ஆன்லைன் விளையாட்டு குறித்தும் அதன் விளம்பரங்களில் நடிப்பது குறித்தும் பேசுகையில், ``ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல, அனைத்து விளையாட்டுகளும் போதைதானே... ரம்மி விளையாட்டு அறிவுபூர்வமான விளையாட்டு. அறிவு இல்லாமல் ரம்மி விளையாட முடியாது.

சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம்
சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம்

நான் சொன்னாதால்தான் எல்லோரும் விளையாடுகிறார்களா? நான் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன். அதை இப்போதுதான் வெளியிடுகிறார்கள். அப்போதே அவசரச் சட்டம் வந்திருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன். மதுவுக்கு மாற்றாக கள்ளு, எனர்ஜி டிரிங்க் என இலங்கையில் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். மேயர் வாகனத்தில் தொங்கிச் சென்றது யதார்த்தமாக நடந்தது. அந்தச் சூழலில், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என யார் இருந்தாலும், சூழலைப் பொறுத்து அப்படித்தான் நடந்திருக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.