Published:Updated:

``ஓபிஎஸ்-ஸும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்!" - அண்ணா பிறந்தநாள் விழாவில் சசிகலா

சசிகலா ( ம.அரவிந்த் )

``நேரம் வரும்போது கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன். ஓ.பி.எஸ்-ஸும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்." - சசிகலா

``ஓபிஎஸ்-ஸும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்!" - அண்ணா பிறந்தநாள் விழாவில் சசிகலா

``நேரம் வரும்போது கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன். ஓ.பி.எஸ்-ஸும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்." - சசிகலா

Published:Updated:
சசிகலா ( ம.அரவிந்த் )

``ஓ.பி.எஸ்-ஸும், நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நேரம் வரும்போது கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன். அ.தி.மு.க-வுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறுவோம்" என தஞ்சாவூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் சசிகலா தெரிவித்தார்.

சசிகலா
சசிகலா

தஞ்சாவூர், அருளானந்த நகரில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா பேரரிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார். இதற்காக வீட்டின் முன் பகுதியில் உள்ள தோட்டத்தில் குடில் அமைக்கப்பட்டிருந்தது. அண்ணா படம் வைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சசிகலா ஆதரவாளர்கள் ஏராளமானோர் வீட்டின் முன் திரண்டிருந்தனர். சரியாக 10:30 மணியளவில் சசிகலா வீட்டிலிருந்து தோட்டத்துக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர், ``அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரே, வருங்கால முதல்வரே!" என கோஷமிட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கிய சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க-வை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்வோம்.

அண்ணா பிறந்தநாள் விழாவில் சசிகலா
அண்ணா பிறந்தநாள் விழாவில் சசிகலா

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன். ஓ.பி.எஸ்-ஸும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். `தி.மு.க அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை!' என நான் போகும் இடங்களில் மக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல. அரசாங்கத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அவற்றை அரசு சரிசெய்ய வேண்டும்.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்மீது நடத்தப்படும் சோதனை குறித்து வெளியே தெரிந்த பிறகே பேச வேண்டும், நாமாக எதையும் சொல்லக்கூடாது. அ.தி.மு.க-வுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறுவோம்" எனத் தெரிவித்தார்.